சினிமா

பொன்னியின் செல்வனில் நடித்த மூத்த நடிகரின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழு: தீர்வு கிடைத்ததா?

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக காத்தாடி ராமமூர்த்திக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை லைகா நிறுவனம் கொடுத்துள்ளதாக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் நடித்த மூத்த நடிகரின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழு: தீர்வு கிடைத்ததா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவில் இன்றியமையாத நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி. 1967-ல் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் துணை இயக்குநர், சைடு ரோல், நண்பர் ரோல், குணசித்திர கதாபாத்திரம், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

சினிமாவில் தொடங்கிய இவரது பயணம் சின்னத்திரை வரை சென்றது. தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 201-2015 வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மடிப்பாக்கம் மாதவன்' என்ற தொடரிலும் நடித்தார்.

பொன்னியின் செல்வனில் நடித்த மூத்த நடிகரின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழு: தீர்வு கிடைத்ததா?

மேலும் சின்னப்பாப்பா பெரியப்பாப்பா, சத்யா, பாண்டவர் இல்லம் என அண்மையில் வெளியான தொடர்களில் நடித்து வந்த இவர், தற்போது பிரியமான தோழி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அதோடு அவ்வப்போது திரைப்படங்களில் சிறிய கதாபத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், ஆனால் நேரமின்மை காரணமாக அது நீக்கப்பட்டதாகவும், இவர் நடித்ததற்கு கூலி கூட இன்னும் வரவில்லை என்றும் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பொன்னியின் செல்வனில் நடித்த மூத்த நடிகரின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழு: தீர்வு கிடைத்ததா?

கடந்த மாதம் (ஜனவரி) 23-ம் தேதி அவர் வெளியிட்ட பதிவில், "60 வருடங்களாக நாடகம், சினிமா, சின்னத்திரை தொடர் என்று தொடர்ந்து இயங்கிவரும் காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் தன் ஜுகல் பந்தி நாடகத்திற்கு அழைத்திருந்தார். அவர் அடிப்படையிலேயே நகைச்சுவையுடன் அனைவரையும் சிரிக்கவைத்துப் பேசும் ஜாலியான நபர். நாடகத்திலும் அதே மாதிரியான பாத்திரம்.

பெற்றால்தான் பிள்ளையா, தத்தெடுத்தாலும் பிள்ளைதான்! - இதுதான் நாடகத்தின் அடிப்படைக் கரு. திரு.நாணு எழுதி இயக்கிய இந்த நாடகத்தில் நடித்த அத்தனைப் பேரும் அர்ப்பணிப்புடன் மிகையில்லாமல் நடித்து காட்சிக்குக் காட்சி கைத்தட்டல் வாங்கிக்கொண்டிருந்தார்கள். மொக்கைத்தனமான ஜோக்ஸ் ஒன்றுகூட இல்லை. எல்லாமே கிளாஸ் நகைச்சுவை. 90 நிமிடங்களுக்கு க்ளீன் எண்ட்டர்டெய்ன்மெண்ட் வித் டேக் ஹோம் மெசேஜ்.

சரியாக 7 மணிக்குத் துவங்கி சரியாக 8.30 க்கு முடித்த துல்லியமாகட்டும், எங்கும் யாரும் ஒரு வரிகூட பிசகாமல் நடித்த ஈடுபாடாகட்டும்.. முழு நாடகத்திலும் மேடையில் யாருமே செருப்பு அணியாமல் நடித்த மேடை மரியாதையாகட்டும்.. மனதிற்கு இதமளித்தது.

ஹம்ஸத்வணி அமைப்பு நடத்திய இந்த நாடகத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலி நாற்காலி இல்லாத நிறைந்த அரங்கைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. காத்தாடி சாரையும், குழுவினரையும் மனதாரப் பாராட்டிவிட்டுதான் புறப்பட்டேன்.

பொன்னியின் செல்வனில் குடந்தை ஜோதிடராக நடித்ததில் பெருமைப்பட்டேன், நீளம் கருதி என் பகுதிகள் வெட்டப்பட்டதற்கு வருந்தினேன் என்றார். ஆனால் நன்றாக வசதிகள் செய்துகொடுத்து மரியாதையாக நடத்தினார்கள் என்றார். நடித்ததுதான் வரவில்லை, பேமெண்ட்டாவது வந்துவிட்டதல்லவா என்று நான் கேட்காமல் இருந்திருக்கலாம். சங்கடத்துடன் குறுக்கில் தலையசைத்து உதடுகளைப் பிதுக்கினார்.

பொன்னியின் செல்வனில் நடித்த மூத்த நடிகரின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழு: தீர்வு கிடைத்ததா?

பழங்கால கலைஞர்கள் கறாராகப் பேசமாட்டார்கள். மணிரத்னம் அவர்கள் வரைக்குமோ, லைகாவின் பெரிய அதிகாரிகள் வரைக்குமோ இந்த மாதிரி விஷயங்கள் போவதில்லை. ஒருவேளை இந்தப் பதிவின் மூலம் ஒரு நல்ல கலைஞனின் உழைப்புக்கான மரியாதை கிடைத்தால் நல்லது என்கிற நோக்கத்தில் பகிர்கிறேன்.

(இதற்கே கண்டிப்பாக காத்தாடி சார் கோபித்துகொள்வார். பரவாயில்லை)" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவின் எதிரொலி காரணமாக தற்போது காத்தாடி ராமமூர்த்திக்கு லைகா நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துள்ளதாக மீண்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோதிடர் வேடத்தில் நடித்தார் காத்தாடி ராமமூர்த்தி. நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகளில் அவருடையவையும் சிக்கின.

அதை வருத்தத்துடன் பகிர்ந்ததுடன் தன் உழைப்புக்கான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்தார். அதை ஒரு பதிவாக்கினேன். நேற்று காத்தாடி சாரை உரத்த சிந்தனையின் விழாவில் சந்தித்தபோது முக மலர்ச்சியுடன் தொகை வந்தது என்று நன்றி சொன்னார்.கவனத்திற்கு வந்ததும் நடவடிக்கை எடுத்த லைகா நிறுவனத்திற்கு நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories