சினிமா

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பொங்கல் சிறப்பு படங்கள் முடிந்து அடுத்து திரையில் வெளியாகவிருக்கும் படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'இரத்தத்தில் கலந்தது சினிமா' என்பது போல், நம்மால் சினிமா பார்க்காமல் இருக்க முடியாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கபட்ட சினிமா, பிற்காலத்தில் பொது கருத்துக்களை, விழிப்புணர்வுகளை எடுத்து கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் 2 பெரிய நடிகர்களின் படங்கள் வாரிசு - துணிவு நேரடியாக மோதியது. இதில் பொங்கல் வின்னர் யார் என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி வெளியான இந்த இரு படங்களானது தற்போது வரை வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரு படங்களின் வெளியீட்டால் தற்போது வரை திரையரங்குகளில் வேறு எந்த படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதே போல், பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். அதோடு இது வெளியாகி 20 நாட்களுக்கு பிறகுதான் திரையரங்கில் படங்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

அந்த வகையில் தற்போது ஜனவரி இறுதி முதல் பிப்ரவரி இறுதி வரையுள்ள வெளியாகும் படங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியல் இதோ : -

ஜனவரி 25 :

பதான் (Pathaan) - பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படம், வரும் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

ஜனவரி 26 :

பிகினிங் (Beginning) - ஆசியாவின் முதல் Split Screen படமாக எடுக்கப்பட்டுள்ளது பிகினிங் திரைப்படம். வினோத் கிஷன், கெளரி, ரொகினி, Kpy பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஜெகன் விஜயன் இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

மைக்கேல் (Michael) - சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா கெளஷிகே, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

ரன் பேபி ரன் (Run Baby Run) - இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

பொம்மை நாயகி (Bommai Nayagi) - இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு, பேபி ஸ்ரீமதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 03 :

தி கிரேட் இந்தியன் கிட்சன் (The Great Indian Kitchen) - மலையாள மொழியில் ஹிட் கொடுத்த இப்படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்குக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 10 :

Dada - அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், VTV கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். வரும் பிப்ரவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 17 :

சாகுந்தலம் (Shaakuntalam) - இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 17 :

வாத்தி (Vaathi) - இயக்குநர் வெங்கி அத்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 17 :

Ant-Man and the Wasp: Quantumania - ஹாலிவுட் படமான இப்படமானது மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. முந்தைய பகுதியான Ant-Man மாற்றும் Ant-Man and the Wasp படம் பார்த்தால் மட்டுமே இந்த படத்தின் கதையும் புரியும். மார்வெல் யுனிவெர்சில் முக்கிய அங்கம் வகிக்கும் Ant-Man கதாபாத்திரத்தின் 3-வது பாகமான இந்த படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

வாரிசு-துணிவு பொங்கல் முடிஞ்சுட்டு.. அடுத்து வரிசை கட்டி ரிலீஸ் ஆக போகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

பிப்ரவரி 24 :

பார்டர் (Borrder) - அருண்விஜய், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Related Stories

Related Stories