சினிமா

அமெரிக்க தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்.. அடித்து துரத்திய நிர்வாகம்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் !

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் கண்டுகளித்த ரசிகர்களை, திரையரங்கு நிர்வாக வெளியேற்றியுள்ளது.

அமெரிக்க தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்.. அடித்து துரத்திய நிர்வாகம்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களை முன்னிட்டு அணைத்து மொழிகளிலும் ஒரு படமாவது வெளியாவது வழக்கம். அந்த வகையில் தமிழில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு வெளியாகி இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று திரையரங்கில் வெளியான இப்படங்கள் பல்வேறு நாடுகளில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தெலுங்கு மொழி படமான பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படமும் வெளிநாடுகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவின் 107-வது படமான வீர சிம்ஹா ரெட்டி இன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்க தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்.. அடித்து துரத்திய நிர்வாகம்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணாவுடன் ஸ்ருதி ஹாசன், வர லட்சுமி, ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

கோடி கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள பாலகிருஷ்ணாவின் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அமெரிக்க தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்.. அடித்து துரத்திய நிர்வாகம்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் !

இந்த நிலையில் இப்படம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தங்கள் பாணியில் கொண்டாட்டத்துடன் கண்டுகளித்தனர். அப்போது அவர்கள் கொண்டாட்டம் அடுத்தகட்ட லெவெலுக்கு மாற, தங்கள் கையில் வைத்திருந்த டிக்கெட்டுகள், பேப்பர்கள் உள்ளிட்டவற்றை கிழித்து கொண்டாடினர்.

அதோடு ஒரு பக்கம், பாலையாவின் மாஸ் டயலாக் சத்தம், அதற்கே டப் கொடுக்கும்படியாக ரசிகர்களின் அலறல் சத்தம் வெளியாகி திரையரங்கு ஒரு போர் அரங்கு போல் காட்சியளித்தது. அதோடு இவர்களது இந்த சத்தமானது, அருகிலிருந்த மற்ற ஸ்கிரீனில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிதளவு தொந்தரவை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் அவர்கள் புகார் அளிக்கவே, உடனே ஆப்ரேட்டர், காவல் அதிகாரியுடன் உள்ளே சென்று ரசிகர்களை கிழித்து தொங்கவிட்டார். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ரசிகர்கள் செய்த இந்த அட்ராஸிட்டி காரணமாக அவர்களை வெளியே துரத்திவிட்டு அந்த ஷோவை ரத்து செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விஜயின் வாரிசுவின் தெலுங்கு ரிலீஸுடன், இந்த படமும் வெளியாகிவுள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரசடு படம் வரும் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories