சினிமா

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu

கடந்த 2014-ம் ஆண்டு கலைஞர் போட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்துள்ள படம்தான் 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் நேருக்கு நேர் மோதுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வந்தது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

பின்னர் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu

இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது. தொடர்ந்து வாரிசு படம் தனது ஆடியோ லான்ச்சை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. இதில் விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்களை தாக்கி பேனர் ஒன்றை தூக்கி பிடித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வெறுப்பேத்த, உடனே அவர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மற்றொரு பேனரையும் அடித்தனர். வாரிசு இசை வெளியீடு முடிந்த அடுத்த நாளே, துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வெளியானது.

மேலும் துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டி, அதன்படி துபாயில் பறக்கும் ஊர்தியில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அதோடு துணிவு குழு தங்கள் படத்தின் ட்ரைலரை 31-ம் தேதி வெளியிட்டனர்.

துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவு கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இந்திய MONEY HEIST என்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்பட ட்ரைலர் தற்போது வரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வரும் பொங்கலை முன்னிட்டு 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் 'துணிவு' மற்றும் 'வாரிசு' படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல் ஆகி விட்டது. மேலும் இணையத்தில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு ரசிகர்கள் இலவசமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞருமான கலைஞர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியிட்டு ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த டுவீட்டில், "துணிவு இருந்தால் துக்கம் இல்லை!.. துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“துணிவு இருந்தால்..” - கலைஞர் போட்ட துணிவு ட்வீட் : Twitterல் Trend செய்யும் நெட்டிசன்கள் ! | #Thunivu

அந்த ட்வீட் தற்போது இணையவாசிகள் வைரல் செய்து வருகின்றனர்.

Related Stories

Related Stories