சினிமா

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'இரத்தத்தில் கலந்தது சினிமா' என்பது போல், நம்மால் சினிமா பார்க்காமல் இருக்க முடியாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கபட்ட சினிமா, பிற்காலத்தில் பொது கருத்துக்களை, விழிப்புணர்வுகளை எடுத்து கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் இந்தாண்டு தீப ஒளி பண்டிகையின் போது, தமிழ் திரையுலகில் பல்வேறு படங்கள் வெளியானது. அதிலும் திரையரங்கில் இரண்டு படங்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டது.

அதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தீப ஒளி பண்டிகை வரை மட்டுமே திரையரங்கில் இந்த படம் ஓடும் என்றும் அனைவரும் எண்ணிய நிலையில், அப்போதும் மாஸ் வசூல் வேட்டையை செய்தது.

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

அதே போல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 பெரிய நடிகர்களின் படங்கள் வாரிசு - துணிவு நேரடியாக மோதவுள்ளது. இந்த பட வெளியீட்டால் குறைந்தது 1 வார காலம் வேறு எந்த படமும் திரைக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெளியீட்டுக்காக காத்திற்கும் படங்கள் ஒன்று பொங்கலுக்கு சில வாரங்கள் முன்பு வெளியாக வேண்டும், அல்லது பொங்கலுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து வெளியாக வேண்டும்.

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

அந்த வகையில் இந்த வாரம் திரையீட்டுக்காக 6 தமிழ் படங்கள் காத்திருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் 2 வெளியாகிறது.

டிசம்பர் 29 :

'தி கிரேட் இந்தியன் கிட்சன்' (The Great Indian Kitchen) - மலையாள மொழியில் ஹிட் கொடுத்த இப்படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்குக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் 29-ம் திரைக்கு வரவுள்ளது.

டிசம்பர் 30 :

டிரைவர் ஜமுனா - இயக்குநர் பி.கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம், வரும் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

டிசம்பர் 30 :

ராங்கி - M சரவணன் இயக்கத்தில் திரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

நேரடியாக மோதிக்கொள்ளும் திரிஷா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

டிசம்பர் 30 :

ஓ மை கோஸ்ட் - R. யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

டிசம்பர் 30 :

செம்பி - இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, குக்கு வித் கோமாளி அஸ்வின் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

டிசம்பர் 30 :

தமிழரசன் - பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories