சினிமா

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

பதான் படத்தில் வெளியான பாடலுக்கு எழுந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துத்துவ கும்பலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக ட்வீட் செய்துள்ளார்.

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகிவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் Besharam Rang என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' பாடல் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

இந்த நிலையில், இந்த பாடலுக்கு இந்துத்துவ கும்பலிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. பாடலில் தீபிகா உடைக்கு எழுந்த சர்ச்சை, தீபிகா காவி நிற உடையை அணிந்துள்ளதாக மாறியது. இதனால் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், "பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்து கடவுளரை அவமதிக்கின்றன.

பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் தான் என்ன?

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்" என்றார்.

மேலும் வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 'பதான்' படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் flex-ஐ எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து இந்துத்துவ கும்பல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

இந்த நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், காவி உடை அணிந்து பலவகையான குற்றச்செயல்களில் ஈடுபடுவது சரியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காவி உடை அணிந்து கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர், சிறுமியை ஒரு சாமியார் பாலியல் வன்கொடுமை செய்கிறார், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கின்றனர். இதெல்லாம் தவறில்லை, ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி நிற உடை அணிந்தது மட்டும் தவறா? சும்மா கேட்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

பதான் சர்ச்சை : “காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா?” - இந்துத்துவ கும்பலுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

முன்னதாக ஷாருக் உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து "இந்த பாடலை எடுத்தது இயக்குநர், காவி உடை அணிந்து ஆடியது தீபிகா, ஆனால் எரிப்பதோ ஷாருக் கான் படம்??.. இந்துத்துவ கும்பல் மதவெறியை தூண்டுகிறது" என்று பலரும் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories