சினிமா

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கவிருக்கும் 'லைசென்ஸ்' திரைப்படத்தின் முதல் லுக் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் பாடகி ராஜலட்சுமி. இவர் இவரது கணவர் செந்திலுடன் அதிகமான கிராமிய பாடல்களை பாடியுள்ளார். அதிலும் குறிப்பாக 'ஏ சின்ன மச்சான்..' பாடல் மிகவும் பிரபலமானது.

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

அந்த பாடல் வெற்றியடைந்ததால், அதனை பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்றது. அதிலும் இவர்கள் இருவரும் தான் பாடியுள்ளார்கள். அதன்பிறகு பல பாடல்களை பாடிய ராஜலட்சுமி அண்மையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "அய்யா சாமி.." பாடலை பாடியுள்ளார்.

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

இந்த பாடல் இவருக்கு மேலும் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ராஜலட்சுமி புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு படக்குழுவினர் 'லைசென்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாடகி to நடிகை : நயன்தாரா லுக்கில் பாடகி ராஜலட்சுமி.. வெளியான போஸ்டரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

அந்த போஸ்டர் லுக்கில் ராஜலட்சுமி, அறம் படத்தின் நயன்தாரா போல் இருப்பதாக தெரிகிறது. அதன்மூலம் இந்த படமும் பெண்ணை மைய படுத்திய கதையாகவே அமைந்துள்ளது என்று அறிய முடிகிறது. பாடகியாக அனைவரையும் கவர்ந்த ராஜலட்சுமி, ஒரு நடிகையாக ரசிகர்கள் மனதை ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories