சினிமா

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

துணிவு படத்தின் Chilla Chilla பாடல் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சில தோல்வியை தழுவினாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களால் தூக்கி விடும். இதனாலே இவர் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்டாராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல கேளிக்கையான விஷயத்தை செய்து வந்தனர். இருப்பினும் இந்த படத்தில் அப்டேட்-ஐ படக்குழுவினர் ரகசியமாகவே வைத்திருந்தனர். எனினும் படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

முன்னதாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அண்மையில் அறிவித்திருந்தனர்.

இதற்காக ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அதன் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

அதன்படி வரும் டிசம்பர் 9-ம் தேதி (இன்னும் 4 நாட்களில்) வெளியாகும் என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர், "காத்திருப்பு முடிந்தது.. டிசம்பர் 9 முதல் உங்கள் Playlist-ஐ Chilla Chilla ஆள வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

“காத்திருப்பு முடிந்தது..” -துணிவு: 'Chilla Chilla' பாடல் வெளியீட்டு தேதி அறிவிவிப்பை வெளியிட்ட படக்குழு

விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜயின் வாரிசு படத்தின் அடுத்த பாடலான 'தீ தளபதி' பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் இன்று அஜித்தின் 'துணிவு' படத்தின் பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories