சினிமா

நடிகர் அஜித்தை திடீரென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. அவரே போட்ட ட்வீட்.. பின்னணி என்ன?

தான் நீண்ட நாள் கழித்து நடிகர் அஜித்தை சந்தித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்தை திடீரென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. அவரே போட்ட ட்வீட்.. பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தான் நீண்ட நாள் கழித்து நடிகர் அஜித்தை சந்தித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய தனது திரை பயணத்தை காமெடி, காமெடி கலந்த ஹீரோ என்ற லெவெலுக்கு தன்னை கொண்டு சென்றுள்ளார்.

நடிகர் அஜித்தை திடீரென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. அவரே போட்ட ட்வீட்.. பின்னணி என்ன?

இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், படலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தற்போது திரையுலகில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் இவரது இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இவரது ரசிகர்கள் தான் காரணம். இவரது நடிப்பால் 2கே கிட்ஸை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான நாயகனாக இவர் விளங்குகிறார்.

நடிகர் அஜித்தை திடீரென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. அவரே போட்ட ட்வீட்.. பின்னணி என்ன?

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டான்' படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் அதன்பிறகு வெளியான 'பிரின்ஸ்' படம் எதிர்பார்த்த அளவு வசூல் கூட சாதனை படைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது இவர் 'அயலான்', 'மாவீரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது துணிவு படத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்தை, சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்கள் நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித்தை திடீரென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. அவரே போட்ட ட்வீட்.. பின்னணி என்ன?

இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர். முன்னதாக, 2008-ம் ஆண்டில் அஜித் நடிப்பில் வெளியான 'ஏகன்' படத்தில் அஜித்துக்கு புத்தகத்தை எடுத்துக்கொடுக்கும் ஒரு நபராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories