சினிமா

2 முறை புற்றுநோய்.. மூளைச்சாவு.. மாரடைப்பு.. 24 வயது இளம் நடிகைக்கு நேர்ந்த அவலம்- திரையுலகம் அதிர்ச்சி !

இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்ட இளம் நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2 முறை புற்றுநோய்.. மூளைச்சாவு.. மாரடைப்பு.. 24 வயது இளம் நடிகைக்கு நேர்ந்த அவலம்- திரையுலகம் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்ட இளம் நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா. 24 வயதுடைய இவர் பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்துள்ள 'ஜியோன்கதி' என்ற தொடர் பெங்காலி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு இவரது கால் எலும்பில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு அந்த நோயிலிருந்து மீண்டார்.

2 முறை புற்றுநோய்.. மூளைச்சாவு.. மாரடைப்பு.. 24 வயது இளம் நடிகைக்கு நேர்ந்த அவலம்- திரையுலகம் அதிர்ச்சி !

பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு இவரது வலது நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கும் அவர் சிகிச்சை எடுத்து அண்மையில் குணமானார். தொடர்ந்து இரண்டு புற்றுநோயில் இருந்து மீண்ட இவரை, மற்ற நோய்கள் விடவில்லை.

கடந்த நவம்பர் 14-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு 2-வது முறையாக மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.

2 முறை புற்றுநோய்.. மூளைச்சாவு.. மாரடைப்பு.. 24 வயது இளம் நடிகைக்கு நேர்ந்த அவலம்- திரையுலகம் அதிர்ச்சி !

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஐந்த்ரிலா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ரைஸ்கர்கள் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெறும் 24 வயதில் இருக்கும் பெண், இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டு, 2 முறை மாரடைப்பு ஏற்பட்டு தற்போது உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 முறை புற்றுநோய்.. மூளைச்சாவு.. மாரடைப்பு.. 24 வயது இளம் நடிகைக்கு நேர்ந்த அவலம்- திரையுலகம் அதிர்ச்சி !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் திரையுலகில் 1970 முதல் 1980 வரை 10 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தல்ஜீத் கவுர் கங்குரா என்ற பழம்பெரும் நடிகை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது பஞ்சாப் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இளம் நடிகை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories