சினிமா

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ‘நடிகர் கிருஷ்ணா’ காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ‘நடிகர் கிருஷ்ணா’ காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலுங்கு சினிமா முன்னணி நடிகராகவும், தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று காலமானார். 79 வயதை கடந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவரை மருத்துவர்கள் கண்காணித்துள்ளனர்.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ‘நடிகர் கிருஷ்ணா’ காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் இருந்த காரணத்தால் வென்டிலேட்டர் பொருத்தபட்டுள்ளது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை இவர், ஐந்து தசாப்தங்களாக திரை துறையில் தனக்கென முத்திரை பதித்துள்ளார். 350க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா 1965-க்கு பிறகு பிரதான ரோல்களில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் கிருஷ்ணா செயல்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ‘நடிகர் கிருஷ்ணா’ காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மூத்த தெலுங்கு நடிகர் "சூப்பர்ஸ்டார்" திரு. கிருஷ்ணா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். தெலுங்குத் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா அவர்கள் திகழ்ந்தார்.

அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்யவியலாத இழப்பாகும். கிருஷ்ணா அவர்களின் மகன் நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories