சினிமா

பிரபல சின்னதிரை நடிகர் மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல் !

பிரபல நடிகர் சித்தாந்த் சுர்யவன்ஷி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னதிரை நடிகர் மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹிந்தி சின்னதிரையில் மிகவும் பிரபலமான நடிகர், சித்தாந்த் சுர்யவன்ஷி (வயது 46). இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்,இரண்டு குழந்தைகள் உள்ளனர். பல்வேறு சின்னதிரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடையவர்.

இந்த நிலையில், இவர் வழக்கம்போல ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல புகைப்படக்கலைஞர் விரல் பயானி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல சின்னதிரை நடிகர் மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல் !

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தாண்டு நிறைய இளைஞர்கள் நாம் இழந்துள்ளோம். எப்போதும் உடற்தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்கும் சித்தாந்த் சுர்யவன்ஷிக்கு எப்படி இது நிகழ்ந்தது என்றே தெரியவில்லை.

அவரை இறுதியாக பார்க்கும்போது முழு உடற்தகுதியோடுதான் காணப்பட்டார். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சித்தாந்த் சுர்யவன்ஷிக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல சின்னதிரை நடிகர் மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல் !

கடந்த ஆண்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது சித்தாந்த் சூர்யவன்ஷி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories