சினிமா

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' திரைப்படம் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' திரைப்படம் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'எதிர் நீச்சல்', வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். 'பிரின்ஸ்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன், நடித்தாலே படம் ஹிட் என்று சொல்லும்படி ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?

அவரது நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை, வேலைக்காரன், கனா, டாக்டர், டான் என பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் கொடுத்தது. இருப்பினும் அண்மையி வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது இவரது கை வசம் அயலான், மாவீரன் என்று இரண்டு படங்கள் உள்ளது. இதில் மாவீரன் படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரிய அளவு பெயர் பெற்ற 'மண்டேலா' படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வின் இயக்குகிறார்.

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?

இந்த படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டர் அண்மையில் வெளியாகியது. அந்த போஸ்டரில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'தளபதி' படத்தில் ரஜினியின் கெட்டப் போன்று சிவகார்த்திகேயன் தோற்றமளித்திருந்தார். இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு மட்டுமின்றி எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 40 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், மீது இன்னும் 30 நாட்கள் தான் மீதி இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் காரணம் தெரியாமல் திகைத்திருந்த நிலையில், தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்தின் படபிடிப்பு -அதிர்ச்சியில் ரசிகர்கள்: காரணம் என்ன?

அதாவது சிவகார்த்திகேயன், தான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'மாவீரன்' படத்தின் சில காட்சிகளை மாற்றச்சொன்னதாகவும், அதற்கு இயக்குநர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக இயக்குநர் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

எதுவாகிலும் சரி, படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories