சினிமா

‘துணிவு’ பொங்கலுக்கு தயாரா ? : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரெட் ஜெயண்ட் நிறுவனம் !

நடிகர் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

‘துணிவு’ பொங்கலுக்கு தயாரா ? : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரெட் ஜெயண்ட் நிறுவனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் எச்.வினோத் கூட்டணியில் இனைந்தார் நடிகர் அஜித் குமார். அஜித் குமாரின் இந்த படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.'துணிவு' படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு, அதனை ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் அந்நி்றுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories