சினிமா

“‘ஒரே நாடு ஒரே குழாய்’.. இந்தியாவை சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட் சதி” - சர்தார் எப்படி இருக்கு ?

தேசத் துரோக வழக்கு என்ன, தண்ணீர் தனியார் மயமாக்கல், உளவாளி சர்தார் எப்படி இந்தக் கதைக்குள் வருகிறார், code Red என்பதென்ன, தண்ணீர் திருட்டு முறியடிக்கப்பட்டதா என்பதையெல்லாம் சொல்லும் படமே ‘சர்தார்’.

“‘ஒரே நாடு ஒரே குழாய்’.. இந்தியாவை சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட் சதி” - சர்தார் எப்படி இருக்கு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த திபாவளி தின ஸ்பெஷலாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்தார்’. இரும்புத்திரையில் தொழில் நுட்பத் திருட்டு, ஹீரோ படத்தில் அறிவுத் திருட்டு வரிசையில் சர்தார் படத்தில் 'தண்ணீர் திருட்டு' மையமாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் பி.எஸ்.மித்ரன். கார்த்திக்கு சர்தார் கைகொடுத்திருக்கிறதா? படம் எப்படி இருக்கிறது ?

இணையத்தில் எப்போதும் டிரெண்டில் இருக்க வேண்டுமென விரும்பும் பப்ளிசிட்டி மன்னன் இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷ். அவரின் சர்க்கிளுக்குள் தேசத் துரோக வழக்கு ஒன்று வருகிறது. அந்த கேஸை பிரேக் செய்துவிட்டால் விளம்பரம் தேட முடியுமென்பதால் அந்த வழக்கை கையில் எடுக்கிறார் இன்ஸ்., விஜய பிரகாஷ். தேசத் துரோக வழக்கு என்ன, தண்ணீர் தனியார் மயமாக்கல், உளவாளி சர்தார் எப்படி இந்தக் கதைக்குள் வருகிறார், code Red என்பதென்ன, தண்ணீர் திருட்டு முறியடிக்கப்பட்டதா என்பதையெல்லாம் சொல்லும் படமே ‘சர்தார்’.

“‘ஒரே நாடு ஒரே குழாய்’.. இந்தியாவை சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட் சதி” - சர்தார் எப்படி இருக்கு ?

உளவாளி சர்தார் எனும் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயபிரகாஷ் என இரண்டு வித கதாபாத்திரங்களில் வருகிறார் கார்த்தி. நவயுக டிரெண்டிங் வாழ்க்கையில் வாழும் அப்டேட் போலீஸ் அதிகாரியாகவும், நாட்டுக்காக தன்னை அர்பணித்த உளவாளியாகவும் என இரண்டிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக, வயதான தோற்றம், தளர்ந்த நடை, நடுங்கும் கைகள் என்றிருந்தாலும் ஆக்‌ஷனில் மிரட்டுகிறார். once upon a time in a ghost ஆகவே தெறிக்கவிடுகிறார் கார்த்தி.

‘ஒரே நாடு ஒரே குழாய்’ எனும் தண்ணீர் திட்டத்தினால் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட், தண்ணீர் பாட்டில்களால் ஏற்படும் பலவித நோய்கள், ஒரு உழவாளியின் வாழ்க்கை எப்படியானதாக இருக்குமென்று பலவித விஷயங்களை கொடுத்திருக்கிறார் பி.எஸ்.மித்ரன்.

“‘ஒரே நாடு ஒரே குழாய்’.. இந்தியாவை சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட் சதி” - சர்தார் எப்படி இருக்கு ?

ஒவ்வொரு விஷயமும் விழிப்புணர்வாகவும், அதிர்ச்சிகரமான செய்திகளாகவும் ஆடியன்ஸூக்கு வந்துசேர்கிறது. பொதுவாக, தன்னுடைய படங்களில் சமூகப் பிரச்னைகளை கையில் எடுத்து விழிப்புணர்வு தருவதோடு கமர்ஷியல் படமாகவும் வெற்றி பெறுவார். அப்படியான, கதையாக நேர்த்தியுடன் இருக்கிறது சர்தார்.

ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா மற்றும் லைலா என மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். இதில், லைலாவின் கதாபாத்திரம் மூலமாகவே படம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்கிறது. ரஜிஷாவின் ரோல் மனதிற்கு நெருக்கமாக நிறைகிறது. ராஷி கண்ணா ஹீரோயினாக அழகாய் வந்துபோகிறார். முனிஷ்காந்த், இளவரசு, யூகிசேது என அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். வில்லனாக வரும் சங்கி பாண்டே மிரட்டுகிறார்.

“‘ஒரே நாடு ஒரே குழாய்’.. இந்தியாவை சுடுகாடாக மாற்ற நினைக்கும் கார்ப்பரேட் சதி” - சர்தார் எப்படி இருக்கு ?

டெக்னிக்கலாகவும் படம் Well Sound ஆக இருக்கிறது. பின்னணி இசையிலும் பாடல்களிலும் ஜி.வி.பிரகாஷ் இசை மிரட்டுகிறது. குறிப்பாக, யுகபாரதியின் வரிகளில் ஏறுமயிலேறி கமர்ஷியலுக்கான வலுவான தளம். இரண்டுவிதமான காலக்கட்டம், அதற்கான லைட்டிங், சேசிங் காட்சிகள் என அனைத்திலும் கவனிக்கத்தக்க பணியை மேற்கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.

ஒரு உளவாளியாக இருப்பதில் இருக்கும் சிக்கல்கள், வீட்டில் சந்திக்கும் அவமானங்கள், சக அதிகாரிகளால் ஏற்படும் ஏமாற்றங்கள் என ரசிகர்களுக்கு புதிய கதைகளை படம் தந்திருக்கிறது. பொதுவாக, உளவாளி படமென்றால் ஹீரோயிஸத்தை மட்டுமே காட்டுவார்கள், அப்படியில்லாமல் சில நிஜங்களையும் நிதர்சனங்களாகத் தந்திருக்கிறது சர்தார்.

மொத்தத்தில், நமக்குப் பரிட்சயமில்லாத ஒன்றை பிரம்மிப்புடன் சொன்னதாகட்டும், கமர்ஷியலாக ஹீரோயிசத்திலும் என பக்கா எண்டர்டெயின்மெண்டாக வெளியாகியிருக்கிறது. இந்த சர்தார் ஒரு திறம்பட எடுக்கப்பட்ட உளவாளி படம். இந்த தீபாவளி நிச்சயமாக சர்தார் தீபாவளி என்பதில் சந்தேகமில்லை.

banner

Related Stories

Related Stories