சினிமா

"ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.." - தீபாவளிக்கு திரைக்கு வரப்போகும் தமிழ் மொழி படங்களின் பட்டியல் இதோ !

தீபாவளியை முன்னிட்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையரங்கில் வெளியாகவிருக்கும் தமிழ் மொழி படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

"ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.." - தீபாவளிக்கு திரைக்கு வரப்போகும் தமிழ் மொழி படங்களின் பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் தீபாவளி போன்ற பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் புதுப்படம் வெளியாவது தமிழ் திரையுலகில் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்பாக மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாகியது.

இந்த திரைப்படம் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்கத்தை ஆக்கிரமித்து, வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது வரை சுமார் 400 கோடி வரை வசூல் செய்த இந்த திரைப்படத்தை தீபாவளி சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

"ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.." - தீபாவளிக்கு திரைக்கு வரப்போகும் தமிழ் மொழி படங்களின் பட்டியல் இதோ !

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், போன வாரம் வெளியாகவிருந்த 'பார்டர்', ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள 'Coffee with Kadhal', த்ரிஷா, அரவிந்த் சாமியின் 'சதுரங்க வேட்டை 2', மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா', யோகி பாபு நடிப்பில் வெளியாகவுள்ள 'தாதா', 'ரீ' உள்ளிட்ட 7 படங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

"ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.." - தீபாவளிக்கு திரைக்கு வரப்போகும் தமிழ் மொழி படங்களின் பட்டியல் இதோ !

இந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தின் பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதில் அக்டோபர் 20 முதல் 25-ம் தேதி வரை ஹாலிவுட் முதல் பான் இந்தியா படம் வரை இடம்பெற்றுள்ளது. பட்டியல் இதோ :

>> அக்டோபர் 20 :

- பிளாக் ஆடம் ( Black Adam) ஹாலிவுட் [தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி]

>> அக்டோபர் 21 :

கார்த்தி நடிப்பில் 'சர்தார்' (Sardar) - [தமிழ், தெலுங்கு]

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' (Prince) - [தமிழ், தெலுங்கு]

>> அக்டோபர் 25 :

ராம் சேது (பான் இந்தியா திரைப்படம்)

banner

Related Stories

Related Stories