சினிமா

"விளிம்புநிலை மக்களை சுரண்டும் மேல்தட்டு வர்க்கம்.." - 'ozark' தொடரின் கதைக்களம் கூற வருவது என்ன ?

"உயிரைக் காக்கவென கிளம்பி, இறுதியில் அரசியல் அதிகாரத்தை எட்டும் இடத்தை ஒரு குடும்பம் அடைகிறது" - 'ஒசார்க்' தொடரின் சுவாரஸ்யங்கள் என்னென்ன ?

"விளிம்புநிலை மக்களை சுரண்டும்  மேல்தட்டு வர்க்கம்.." - 'ozark' தொடரின் கதைக்களம் கூற வருவது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒசார்க் என ஒரு இணையத் தொடர். ஜேசன் பேட்மேன் நடித்திருக்கிறார். தொடரின் நாயகப் பாத்திரத்தின் பெயர் மார்ட்டி. அவரின் மனைவி வெண்டி. தொடர் துவங்குகையில் மார்ட்டி ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு நாள் அந்த நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார். அவர் மெக்சிகோவில் இயங்கும் பெரும் போதை சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். நிதி நிறுவனத்தில் இருக்கும் மார்ட்டின் பங்குதாரர் மெக்சிகோ போதைக் கும்பலின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி தர ஒப்புக் கொண்டிருக்கும் தகவல் தெரிய வருகிறது. அது நடக்காததால் ஏற்பட்ட கோபத்தில்தான் மெக்சிகோ போதைக் கூட்டத் தலைவன் வந்திருக்கிறார்.

மார்ட்டியின் பங்குதாரரையும் பிற ஊழியர்களையும் கொல்கின்றனர். அடுத்ததாக மார்ட்டி. அவர் தலைவனின் காலில் விழுந்து கதறி, தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் பல மில்லியன்களுக்கு மேல் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுக்க முடியும் என வாக்குறுதி கொடுக்கிறான். வாய்ப்பு கிடைக்கிறது.

"விளிம்புநிலை மக்களை சுரண்டும்  மேல்தட்டு வர்க்கம்.." - 'ozark' தொடரின் கதைக்களம் கூற வருவது என்ன ?

மார்ட்டி மெக்சிகோவுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்கான எல்லா வேலையையும் செய்து தர மெக்சிகோ போதைக் கூட்டம் ஒத்துழைக்கிறது. அதன் முதல் வேலை மார்ட்டியின் குடும்பத்திலேயே விடுகிறது. மெக்சிகோ கூட்டத்திடமிருந்து தப்பிக்க முன் நிபந்தனையாக மார்ட்டி ஒரு பெரிய தொகையை செலுத்த சம்மதித்திருப்பார்.

ஆனால் அதற்குள் மார்ட்டியின் மனைவி வெண்டி அந்தப் பணத்தை எடுக்கிறார். காரணம் புரியாமல் வெண்டியை மார்ட்டி தேடிச் செல்ல, அப்போதுதான் வெண்டிக்கு இருக்கும் திருமணம் தாண்டிய உறவு தெரிய வருகிறது. வெண்டி உறவு கொண்டிருந்த நபர் கொல்லப்படுகிறார். அவரைக் கொல்வது மார்ட்டி கூட அல்ல, அவர் பணிபுரியவிருக்கும் மெக்சிகோ கூட்டம்.

"விளிம்புநிலை மக்களை சுரண்டும்  மேல்தட்டு வர்க்கம்.." - 'ozark' தொடரின் கதைக்களம் கூற வருவது என்ன ?

மார்ட்டி, வெண்டி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என மொத்தக் குடும்பமும் மெக்சிகோ போதைக் கூட்டத்துக்கு வேலை பார்க்கும் இடத்தை எட்டுகிறது. மொத்தக் குடும்பமும் ஒசார்க் என்கிற இடத்துக்கு இடம்பெயர்கிறது. அது சிறு கிராமம் போல தோற்றமளிக்கும் இடம். நதியோரத்தில் குடும்பம் ஒரு வீடு வாங்குகிறது. அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள், எல்லாவற்றையும் தாண்டி மெக்சிகோ கூட்டம் கொடுக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றினூடாக குடும்பம் பயணிக்கிறது.

உயிரைக் காக்கவென கிளம்பி இறுதியில் அரசியல் அதிகாரத்தை எட்டும் இடத்தை குடும்பம் அடைகிறது. மார்ட்டி தொடங்கிய ஆட்டத்தை ஒரு கட்டத்தில் அதிகார ஆசையில் வெண்டி கைப்பற்றுகிறாள். பிறகு கறுப்பை வெள்ளையாக்குவது மட்டுமின்றி கொலைகள், துரோகங்கள் என அரசியலின் குரூர ஆட்டத்துக்கு நகர்கிறது தொடர்.

"விளிம்புநிலை மக்களை சுரண்டும்  மேல்தட்டு வர்க்கம்.." - 'ozark' தொடரின் கதைக்களம் கூற வருவது என்ன ?
Steve Dietl/Netflix

படத்தில் வரும் பல பாத்திரங்கள் சுவாரஸ்யமானவை. அதிலும் ரூத்தின் கதாபாத்திரம் வடிவமைப்பிலும் சரி, நடிப்பிலும் சரி வேறு எல்லையைத் தொட்டிருப்பார். மொத்தத் தொடரின் கதையோட்டமும் விளிம்புநிலை மக்களை குற்றத்துக்குக் கூட சுரண்டியொழிக்கும் வேலையைத்தான் மேல்தட்டு வர்க்கம் செய்கிறது என்கிற தொனியையே கொண்டிருக்கும். அதனாலேயே அது நெருக்கமாகவும் இருக்கிறது.

தொடர் NETFLIX-ல் காணக் கிடைக்கிறது.

banner

Related Stories

Related Stories