சினிமா

'ரோஜா' தொடரின் வசனகர்த்தா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை ரசிகர்கள் !

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' தொடரின் வசனகர்த்தாவாக இருந்த சித்து மாரடைப்பால் இன்று காலமானார்.

'ரோஜா' தொடரின் வசனகர்த்தா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநரான கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சித்து (வயது 60). இவர் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் துணையாக இருந்துள்ளார்.

இதையடுத்து 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயானி, கரண் ஆகியோர் நடிப்பில் வெளியான 'காதலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து இயக்கிய ஒரு படம் பல்வேறு காரணங்களுக்காக இறுதி வரை வெளிவரவில்லை.

'ரோஜா' தொடரின் வசனகர்த்தா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை ரசிகர்கள் !

பின்னர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'ரோஜா' உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். மேலும் முன்னணி இயக்குநர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து 'கடைமடை' என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

'ரோஜா' தொடரின் வசனகர்த்தா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை ரசிகர்கள் !

இந்த நிலையில், கடந்த நேற்று திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதையடுத்து சிந்துவின் உடலை அவரது சொந்த ஊருக்கு அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories