சினிமா

திடீர் உடல்நலக்குறைவு.. பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு.. பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவரது ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமா புதிய தடத்திற்கு சென்றது. தமிழ் சினிமாவை பாரதிராஜாவிற்கு முன், பின் என்று வகைப்படுத்தலாம். அந்த அளவிற்கு முக்கியமான வெற்றிப் படங்களைத் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு.. பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

'16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்','சிகப்பு ரோஜாக்கள்', 'புதிய வார்ப்புகள்','நிறம் மாறாத பூக்கள்','அலைகள் ஓய்வதில்லை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் படங்கள் முழுவதும் கிராமத்தின் மண் வாசனையை நகடிர்கள் மூலம் கொண்டு வருவதில் இவர் வல்லவர்.

தற்போது வயது முதிர்வின் காரணமாகப் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு, படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திலும் பராதிராஜா நடித்துள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு.. பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories