சினிமா

சச்சி.. நீங்கள் எங்கிருந்தாலும்: தேசிய விருது அறிவிப்புக்குப் பின் நடிகர் பிரத்விராஜ் உருக்கமான பதிவு!

மலையாள படமான 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சச்சி.. நீங்கள் எங்கிருந்தாலும்:  தேசிய விருது அறிவிப்புக்குப்  பின் நடிகர் பிரத்விராஜ் உருக்கமான பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள இயக்குநர் சச்சி இயக்கத்தில் 2020 ஆண்டு வெளிவந்த படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தில் நடிகர்கள் பிரத்விராஜ். பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

ஒரு சிறிய ஈகோ எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்பட்டும் என்பதை இயக்குநர் சச்சி, பிரத்விராஜ் மற்றும் பிஜூமேனன் நடிப்பின் மூலம் நமக்குக் கடத்தியிருப்பார். இப்படம் மலையாள ரசிகர்களைக் கடந்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும், இப்படத்தில் வரும் 'களக்காத்த சந்தனமேரம்' என்ற பாடல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலை நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா பாடியுள்ளார். இவர் இதற்கு முன்பு சினிமாவில் பாடியது இல்லை. இதுதான் அவரது முதல் பாடல்.

சச்சி.. நீங்கள் எங்கிருந்தாலும்:  தேசிய விருது அறிவிப்புக்குப்  பின் நடிகர் பிரத்விராஜ் உருக்கமான பதிவு!

இப்படி பல ஆச்சரியங்களை நிகழ்த்திய அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு 2020ம் ஆண்டிற்கான 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தத்துக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த துணை நடிகருக்காக விருது பிஜூ மேனனுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்காக விருது நஞ்சம்மாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சிறந்த சண்டைக்கான விருது ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தத் படம் வெளியாகி ஐந்து மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் அவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய விருதுகள் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் டீமிற்கு நடிகர் பிரத்விராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் பிரத்விராஜ் சமூகவலைதள பதிவில், "பிஜு சேட்டன், நஞ்சியம்மா மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஒட்டுமொத்த டீமுக்கும், சச்சிக்கும் வாழ்த்துகள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மனிதனே. நீங்கள் எங்கிருந்தாலும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அதனால் நான் உன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories