சினிமா

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியும்.. பிரதாப் போத்தன் சாரும்: மறக்க முடியா நினைவுகளை பகிர்ந்த அயலான் இயக்குநர்!

"நடிப்பாலும், இயக்கத்தாலும் தன்னிகரில்லா ஒரு இடத்தை தனக்கென பதி்த்துவிட்டு இன்று காற்றோடு கரைந்துவிட்டார்" என அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியும்.. பிரதாப் போத்தன் சாரும்: மறக்க முடியா நினைவுகளை பகிர்ந்த அயலான் இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் திருவானந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் போத்தன், 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் வெளியான 'மூடு பனி' திரைப்படத்தில் "என் இனிய போன் நிலாவே" பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழில் பெரிதாக ஹிட் அடித்த 'மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' போன்ற திரைப்படங்களை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.

தற்போது மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வரும் இவர், அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தும் வரும் நிலையில், 69 வயதாகும் இவருக்கு சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியும்.. பிரதாப் போத்தன் சாரும்: மறக்க முடியா நினைவுகளை பகிர்ந்த அயலான் இயக்குநர்!

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ‘நேற்று இன்று நாளை’ மற்றும் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2010ல் என்போன்று சினிமாவில் இயக்குநராக ஆகவேண்டுமென்ற கனவில் இருந்த பலருக்கும் ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது “நாளைய இயக்குநர்” நிகழ்ச்சி. அந்த பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக வீற்றிருந்தவர்கள் இருவர்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியும்.. பிரதாப் போத்தன் சாரும்: மறக்க முடியா நினைவுகளை பகிர்ந்த அயலான் இயக்குநர்!

ஒருவர் இயக்குநர் - நடிகர் பிரதாப் போத்தன், இன்னொருவர் கார்டூனிஸ்ட் மதன் சார். ஒவ்வொரு குறும்படத்தையும் அவர்கள் இருவர் முன் சமர்ப்பித்துவிட்டு கருத்துக்களை கேட்க கேமரா முன் காத்திருக்கும் திக்…திக்… நினைவுகள் இப்போது வந்து போகிறது.

போட்டியாளர்கள் மனமொடிந்து போகாதபடி ஒரு வாஞ்சையோடு விமர்சிப்பவர் பிரதாப் போத்தன் அவர்கள். வளரும் கலைஞர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர். இன்றும் நான் அவரை நினைத்துபார்த்துக்கொள்கிறேன். நடிப்பாலும், இயக்கத்தாலும் தன்னிகரில்லா ஒரு இடத்தை தனக்கென பதி்த்துவிட்டு்இன்று காற்றோடு கரைந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories