சினிமா

‘அவன் இவன்’ திரைப்பட துணை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !

'அவன் இவன்' திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக நடித்த நடிகர் இராமராஜ் உடல்நிலை சரியின்றி நேற்று இரவு காலமானார்.

‘அவன் இவன்’ திரைப்பட துணை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் பாலா இயக்கத்தில், விஷால், ஆர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'அவன் இவன்'. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த நடிகர் ராமராஜ்.

இந்த படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமானார். 72 வயதாகும் இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

‘அவன் இவன்’ திரைப்பட துணை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். தற்போது அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், இராமநாதபுரம், முதுகுளத்தூரிலுள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், திரை ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘அவன் இவன்’ திரைப்பட துணை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !

இராமதபுரத்தை சேர்ந்த இவர், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories