சினிமா

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?

நாமோ, காட்டை முகர்ந்து பார்க்கிறோம். பறித்து வந்து தொட்டியில் வளர்த்து புளகாங்கிதம் கொள்கிறோம்.

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Village ஓர் ஆங்கிலப்படம். இயக்குநர் எம் நைட் சியாமளன். கதைகளின் வழியாக அகச்சிக்கல்களைத் தொடும் படங்கள் படைப்பவர்.

ஒரு கிராமம். பக்கத்திலேயே ஒரு காடு. அந்தக் காட்டில் ஒரு கொலைகார மிருகம் இருப்பதாக ஒரு நம்பிக்கை. அவ்வப்போது காட்டில் இருந்து மிருகம் கிராமத்துக்கு வந்து மக்களை வேட்டையாடும். காடு புக மக்கள் மத்தியில் அச்சம் நிறைந்திருக்கிறது. இரவானால் மக்களில் சிலர், காட்டருகே காவலுக்கு நிற்பார்கள். மிருகம் வரும் சமிக்ஞை தெரிந்தால் ஊருக்கு எச்சரிக்கை விடுப்பார்கள். வீடுகளில் உள்ள பாதாள அறைகளில் ஒளிந்து மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு!

பித்தன் ஒருவன், காதல் போட்டியில் நாயகனை கத்தியால் குத்திவிடுகிறான். ரத்தம் அதிகம் வெளியாகி நாயகன் உயிருக்கு போராடுகிறான். ஊரில் போதுமான மருந்துகள் இல்லை. பெரியவர்களிடம் பேசினால், யாரேனும் காட்டை கடந்து சென்று மருந்துகள் வாங்கி வர வேண்டும் என்கிறார்கள். நாயகன் மீதுள்ள காதலில் தான் மருந்துகள் வாங்கி வருவதாக நாயகி கூறுகிறாள். நாயகி பார்வையற்றவள்.

காட்டுக்குள் இருக்கும் மிருகம் எத்தகையது என்பதை பற்றிய விபரங்கள் ஊர் பெரியவர்களால் நாயகிக்கு வழங்கப்படுகிறது. மிருகம் போட்டிருக்கும் ரோம உடை, அதன் உறுமல், வேகம் என சொல்லிவிட்டு, காட்டுக்குள் மிருகத்துக்காக தோண்டி வைத்திருக்கும் பொறியை பற்றியும் பெரியவர்கள் சொல்கிறார்கள். காட்டுக்கு நாயகி கிளம்புகிறாள்.

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?

உயிர்க்கொல்லி மிருகம் வாழும் காடு. வந்தாலும் பார்த்திட முடியாத, பார்வையற்ற பெண்!

கொஞ்ச தூரத்துக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் போகிறாள். திடீரென ஓர் அரவம். ஆம். மிருகம்தான். ஊர்க்காரர்கள் சொன்ன அதே ரோமம்! நாயகி சுதாரிக்கிறாள்.

மீண்டும் மிருகம் கடக்கிறது.

இந்த முறை மிருகம் நாயகியை அறைகிறது. சுழன்று கீழே விழுகிறாள். கையைத் துழாவி அருகே இருக்கும் ஒரு கட்டையை எடுத்து எழுந்து அந்த மிருகத்துக்கு நேர் எதிராக நிற்கிறாள். ரோம உடைக்குள் இருப்பது மிருகம் அல்ல; ஊரில் இருந்த பித்தன்!

நம்பிக்கை கட்டமைக்கப்படுவது இப்படித்தான்.

அவ்வப்போது காட்டுக்குள் பித்தனோ இல்லை வேறவரோ சென்று மிருகத்தை போல ஓலமிடுவது, அரவம் காட்டுவது என மக்களிடம் பயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தான் ஒருதலையாக காதலித்த பெண், காட்டை தாண்டி செல்ல முயலுவதை ஏற்க முடியாமல், அவளை அச்சுறுத்தி மீண்டும் ஊருக்குள் அனுப்பிட மிருகம் போல வந்து நின்று கொண்டிருக்கிறான் பித்தன்.

அவரவர் சுயதேவைகளை பூர்த்தி செய்வதன் வழியாகத்தான் ஒரு நம்பிக்கையானது வளர்க்கப்படுகிறது.

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?

இது ஏதும் தெரியாமல் மிருகம்தான் நிற்பதாக எண்ணிக் கட்டை சுழற்றிக் கொண்டிருக்கிறாள் நாயகி. ஊருக்குள் சொல்லி அனுப்பிய மிருகப்பொறியும் அருகிலேயே இருக்கிறது. பித்தன் மீது ஒரு சுழற்றல் பட்டுவிடுகிறது. தடுமாறுகிறான். பொறி கலங்குகிறது. காதலை சொல்லும் வாய்ப்பு கிட்டாமலே பொறிக்குள் வீழ்கிறான். உள்ளே வைக்கப்பட்டிருந்த கூர் கம்புகள் செருகி உயிரிழக்கிறான்.

நாயகியை பொறுத்தவரை மிருகம் கொல்லப்பட்டுவிட்டது. தனக்கும் தன் காதலுக்கும் இடையே இருந்தத் தடை விலகிவிட்டது. இனி அடுத்து என்ன?

தட்டுத் தடுமாறி நடந்து காடு முடிகையில் நாயகியின் நடைகோல் ஒரு சுவற்றில் படுகிறது. உடனே சந்தோஷமடைந்து கோலை மடக்கி, எம்பி குதித்து சுவரேறி மறுபக்கம் விழுகிறாள்.

மறுபக்கம், தெள்ளத்தெளிவான 'மனித நாகரிகம்' அருவருப்பாக புலப்படுகிறது. கேமரா மேலே எழும்புகிறது. சுவரருகே ஒரு பெரிய நெடுஞ்சாலை. அதில் ஒரு போலீஸ் கார் வந்து நாயகி அருகே நிற்கிறது. போலீஸ் இறங்கி நாயகியை விசாரிக்கிறான். சுவரைத் தாண்டி உள்ளே இருக்கும் ஊரில் இருந்து மருந்து வாங்க வருவதாக நாயகி சொல்கிறாள். போலீஸ் ஆச்சரியப்படுகிறான்.

மக்கள் அச்சத்தின் பிம்பமாக காடு? அந்தப் பக்கம் இருப்பது யார் ? : Village படம் சொல்லும் செய்தி என்ன?

நாயகிக்கு பார்வை இல்லாததால் என்ன நடக்கிறதென புரியவில்லை. போலீஸுக்கு பார்வை இருந்தாலும் என்ன நடக்கிறதென புரியவில்லை.

ஆம். நாயகி வெளிவந்தது ஒரு reserved forest-லிருந்து; reserved forest-க்குள் இருக்கும் ஓர் ஊரிலிருந்து!

நாம்தான் போலீஸ். பார்வை இருந்தும் ஏதும் தெரியாதவர்கள். காடு என்பது நம்மை பொறுத்தவரை ஒரு பிரதேசம். அழிக்கப்படக்கூடிய இடம். ஆக்கிரமித்து நாசமாக்கிக் கொள்ளும் ஓர் அழகு. ஆனால் காடு அது மட்டுமல்ல.

காடு இல்லாத இடங்களிலும் காடு இருக்கிறது. காட்டின் சுவாசத்தில் காடில்லா இடங்கள் இருக்கிறது.

காடு என்பது ஓர் இருப்பு. அதில் ஒரு பறவையின் எச்சமே நாம். காட்டுக்குள் நம் சமூகங்களை எல்லாம் தாண்டிய வாழ்க்கைகள் பல இருக்கின்றன.

நாமோ, காட்டை முகர்ந்து பார்க்கிறோம். பறித்து வந்து தொட்டியில் வளர்த்து புளகாங்கிதம் கொள்கிறோம். கூண்டுகளில் அடைத்து ரசிப்பதாக சொல்லிக் கொள்கிறோம். காட்டை பெயர்க்க ஆணையிடுகிறோம். அங்கு இருக்கும் வாழ்க்கைகளை அழிக்க விழைகிறோம். அந்த வாழ்க்கைகளில் நாகரிகம் இல்லை என நாம் சொல்லிக் கொள்கிறோம்.

பெயர்ந்த காடு நம்மை பார்த்து எள்ளுகிறது! நாமும் பார்வையற்று தொடர்கிறோம்!

banner

Related Stories

Related Stories