சினிமா

நயன்தாரா படத்தில் நடிக்கும் போனி கபூரின் மகள்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா ?

நடிகை ஸ்ரீ தேவி, போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், தற்போது 'Goodluck Jerry' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா படத்தில் நடிக்கும் போனி கபூரின் மகள்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் மட்டுமல்ல, இந்திய திரை உலகிலேயே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் முடித்தார்.

நயன்தாரா படத்தில் நடிக்கும் போனி கபூரின் மகள்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா ?

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'கோலமாவு கோகிலா'. காமெடி படமான இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இதனை இந்தி மொழியில் ரீமேக் செய்யவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

நயன்தாரா படத்தில் நடிக்கும் போனி கபூரின் மகள்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா ?

இந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ரீ தேவி, போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், இந்த ரீமேக் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சித்தார்த் சென்குப்தா இயக்கிய இந்த படத்திற்கு ‘குட் லக் ஜெர்ரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஜுலை 29 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories