சினிமா

அஜித் படத்தில் இணைந்த மலையாள நடிகை.. AK 61 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான AK 61 படத்தில் நடிகர் மஞ்சுவாரியர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் படத்தில் இணைந்த மலையாள நடிகை.. AK 61 படத்தின் புதிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் ’சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச் வினோத். இதையடுத்து இவர் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித்குமாரை வைத்து நேர்கொண்ட பார்வையை இயக்கினார்.

அஜித் படத்தில் இணைந்த மலையாள நடிகை.. AK 61 படத்தின் புதிய அப்டேட்!

இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். இப்படம் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.

இருப்பினும் மீண்டும் நடிகர் அஜித்குமார் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு AK 61 என அழைக்கப்பட்டு வருகிறது.

அஜித் படத்தில் இணைந்த மலையாள நடிகை.. AK 61 படத்தின் புதிய அப்டேட்!

இந்த AK 61 படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைத் தீபாவளியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு, படப்பிடிப்பு வேலைகளை வேகமாக முடித்து வருகிறது.

இந்நிலையில் AK61 படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories