சினிமா

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பின்னணி பாடகர் மரணம்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோகம்!

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தபோதே பிரபல பின்னணி பாடகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் பாடிக் கொண்டிருந்த  பிரபல பின்னணி பாடகர் மரணம்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்.பிரபல பின்னணி பாடகரான இவர் ஜானி, வாணிஜெயராம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பாடியுள்ளார். மேலும் கேரளா முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் கோயில் விழா மற்றும் நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளார். தனியாக இசைக்குழுவையும் நடித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று ஆலப்புழாவில் நிகழ்ச்சி ஒன்றில் பஷீர், 'மனோ ஹோ தம்' என்ற இந்திப் பாடலை பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உடனே அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அப்போது அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரின் மறைவிற்குக் கேரள முதல்வர் பினராயி விஜய், நடிகர்கள், சக பாடகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories