சினிமா

பொன்னியின் செல்வன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராய்.. பிரபாஸ் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை!

பொன்னியின் செல்வன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராய்.. பிரபாஸ் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'விக்ரம்' இந்தி ட்ரைலர் வெளியானது...

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு கோலாகலமாக நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் ஹிந்தி ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராய்...

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இந்த படம் குறித்து நடிகர் ஐஸ்வர்யா ராய் பேசிய போது “இது மனநிறைவான படம் என்றும் தனது கதாப்பாத்திரத்தை மணிரத்தினம் அழகாக வடிவமைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்”.

பிரபாஸின் PROJECT K படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை !

பிரபாஸ் நடிப்பில் சலார், ப்ராஜெக்ட் கே, ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கடந்த ஆண்டு துவங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே...

தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிவரும் திரைப்படம் ‘லிகர்’. அதனை தொடர்ந்து சமந்தாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூடுபிடிக்கு அருள்நிதியின் ‘தேஜாவு’ பட வியாபாரம்...

அருள் நிதி நடிப்பில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘தேஜாவு’. அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓவர்சீஸ் உரிமையை ‘எபி இண்டர்நேஷ்னல்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

banner

Related Stories

Related Stories