சினிமா

பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள ‘F3’ பட பாடல்.. சமந்தா நடிக்கும் ‘குஷி’ : இது 5IN1_CINEMAS துளிகள்!

‘F3’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே `லைஃப் அன்டே' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள ‘F3’ பட பாடல்.. சமந்தா நடிக்கும் ‘குஷி’ :  இது 5IN1_CINEMAS துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள `F3' பட பாடல்!

அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரின் நடித்துள்ள படம் F3. இது 2019ல் இதே கூட்டணியில் உருவாகி வெளியான F2 படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்களும், ஒரு டிரெய்லரும் வெளியானது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே `லைஃப் அன்டே' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலில் ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. முழுப்பாடல் நாளை வெளியாக உள்ளது. படம் மே 27ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் `குஷி'

தெலுங்கு சினிமாவில் நின்னு கோரி, மஜிலி, டக் ஜெகதீஷ் படங்களை இயக்கியவர் சிவா நிர்வானா. இவர் இப்போது விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் ஒரு படத்த இயக்கிக் கொண்டிருக்கிறார். கபாலி, காலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹ்ருதயம் படத்தின் மூலம் கவனம் குவித்த ஹேஷம் இசையமைக்கிறார். இதனுடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் பெயர் `குஷி' என அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது இந்த `குஷி'

நிவின்பாலியின் `துறமுகம்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத்தில் அன்னையும் ரசூலும், கம்மாட்டிபாடம் போன்ற தரமான படங்களை இயக்கியவர் ராஜீவ் ரவி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படம் `துறமுகம்'. இதில் நிவின் பாலி, இந்திரஜித், பூர்ணிமா, நிமிஷா சஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். 1940கள் 50களில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். துறைமுகத்தில் வேலை செய்த உழைப்பாளிகள், தங்களுடைய ஊதிய உயர்வுக்காக செய்த போரட்டாங்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. எப்போதோ தயராகிவிட்டாலும் ரிலீஸ் மட்டும் தாமதமாகி வந்தது. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது `துறமுகம்'.

`777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது

கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்திருக்கும் கன்னடப் படம் `777 சார்லி'. கன்னட சினிமாவின் முன்னணி ரக்ஷித் ஷெட்டி இதில் நாயகனாக நடித்திருக்கிறார். கூடவே சங்கீதா ஸ்ரீங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சாய்த் எனப் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

படம் தயாராகி சில வருடங்கள் ஆகிவிட்டாலும், ரிலீஸ் ஆக தாமதமாகி வந்தது. சமீபத்தில் இப்படம் ஜூன் 10ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது இந்தப் படம்.

விரைவில் வெளியாகும் `ஷீ-ஹல்க்' வெப் சீரிஸ்!

மார்வல் காமிக்ஸ் பொறுத்தவரை சூப்பர் ஹீரோக்கள் போலவே, சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரங்களும் மிகப் பிரபலம். அப்படி பிரபலமான ஒரு கதாபாத்திரம் தான் ஷீ-ஹல்க். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வலும் - டிஸ்னியும் இணைந்து ஒரு வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் ஷீ ஹல்க் கதபாத்திரத்தில் கனடாவைச் சேர்ந்த டைட்டான (Tatiana Maslany) நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் ஆகஸ்ட் 17ம் தேதி டிஸ்னி தளத்தில் வெளியாக உள்ளது. MCU நான்காவது பகுதியில் முக்கியமான கதாபாத்திரமாக ஷீ-ஹல்க் இருக்கும் என சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories