
2019ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூரின் பே வியூ புரோஜெக்ட்ஸ் - Zee Studios- ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரித்துள்ளது. படம் எதிர்வரும் மே 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் ட்ரெய்லர், பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்துள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.








