சினிமா

லண்டன் பிலிம் பெஸ்டிவலில் வெளியாகும் அனுராக் காஷ்யாப் படம்.. ‘லால் சிங் சத்தா’ பட சிங்கிள் ரிலீஸ்!

நயன்தாரா பட வதந்திக்கு தோனி தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

லண்டன் பிலிம் பெஸ்டிவலில் வெளியாகும் அனுராக் காஷ்யாப் படம்..  ‘லால் சிங் சத்தா’ பட சிங்கிள் ரிலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நயன்தாரா பட வதந்திக்கு தோனி தரப்பு விளக்கம்!

நடிகை நயன்தாராவை வைத்து தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் புதிய படத்தை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த தகவல் வெளியான சூட்டுடனேயே தோனி எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் சார்பில் ஒரு மறுப்பு தகவலை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படத்தயாரிப்பு உறுதியானபின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தாகட் டிரெய்லர் ரிலீஸ் !

பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகி கங்கனா ரணாவத். இவரது நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகிவரும் இந்திப் படம் `தாகட்'. இந்தப் படத்தை ரஸ்னீஷ் கை இயக்கியுள்ளார். அர்ஜூன் ராம்பால், திவ்யா தத், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாலிவுட் படமான `டாம் ரைடர்' பட பாணியில் ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வரும் மே 20ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

அனுராக் காஷ்யாப் இயக்கும் `தோபாரா' !

2020ல் வெளியான `சோக்ட்' படத்துக்குப் பிறகு, அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகிவரும் இந்திப் படம் `தோபாரா'. இதில் தாப்ஸி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே ராகுல் பட், சஸ்வத் சேட்டர்ஜி, பாவைல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லண்டனில் நடைபெறும் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஜூன் 23ம் தேதி திரையாக உள்ளது. தற்பொழுது, படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகும் எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடம் படத்தின் இந்தி ரீமேக் டைட்டில் ரிலீஸ்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் `தடம்'. இப்படம் பெரிய ஹிட்டானதால், தெலுங்கில் `ரெட்' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்பொழுது, இந்தியிலும் தடம் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தி வெர்ஷனில் ஆதித்யா ராய் கபூர், மிர்னாள் தாகுர் நடிக்கிறார்கள். படத்துக்கு `கும்ரா' எனும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, மும்பையில் படப்பிடிப்பு நடந்துவருவதாக தகவல்.

‘லால் சிங் சத்தா’ பட சிங்கிள் ரிலீஸ்!

ஹாலிவுட்டில் பிரபலமான `ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் இந்தி ரீமேக்காக `லால் சிங் சத்தா' படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. இந்நிலையில், படத்திலிருந்து ப்ரீத்தம் இசையில் சிங்கிள் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories