சினிமா

‘பத்தல பத்தல’.. வெளியானது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட சிங்கிள் : விரைவில் தனுஷின் ‘வாத்தி' பட ஃபர்ஸ்ட் லுக்!

‘பத்தல பத்தல’.. வெளியானது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட சிங்கிள் : விரைவில் தனுஷின் ‘வாத்தி' பட ஃபர்ஸ்ட் லுக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. வெளியானது கமல்ஹாசனின் `விக்ரம்' பட சிங்கிள்!

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே 15ம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. தற்போது, அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிளாக கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள `பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

2. `அஜித் 61'ல் நடிக்கும் வீரா!

வலிமை படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை மீண்டும் ஹெச்.வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் 61வது படமாக உருவாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சார்பட்ட பரம்பரை படத்தில் நடித்த ஜான் கொக்கென் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது `நடுநிசி நாய்கள்', `ராஜதந்திரம்' போன்ற படங்களில் நடித்த வீரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Nenjukku Needhi Sevakkaattu Seemaiellam song

3. மே 20ல் `பஞ்சாயத் 2', வெளியானது டிரெய்லர்!

தீபக் குமார் இயக்கத்தில் 2020ல வெளியான இந்தி வெப் சீரிஸ் `பஞ்சாயத்'. இது அமேசான் ப்ரைமில் வெளியானது. அருமையான காமெடி சீரிஸான இது பலரது பாராட்டுகளையும் பெற்றது. ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலராக வரும் இளைஞனை, அந்த கிராம மக்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பதை மையப்படுத்திய கதையாக இருந்தது. தற்போது இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் மே 20ம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாக உள்ளது. தற்போது `பஞ்சாயத் 2' சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

4. வெளியானது கே.ஜி.எஃப் 2 பட மெஹபூபா வீடியோ பாடல்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இதன் இரண்டாம் பாகமும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை குவித்தது. ரவி பஸ்ரூர் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே படத்திலிருந்து ஒவ்வொரு வீடியோ பாடலையும் வெளியிட்டு வந்தனர். தற்போது, படத்திலிருந்து `மெஹபூபா' என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர்.

5. விரைவில் தனுஷின் `வாத்தி' பட ஃபர்ஸ்ட் லுக்!

பல மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். தமிழில் `நானே வருவேன்', `திருச்சிற்றம்பலம்', ஆங்கிலத்தில் `க்ரேமேன்' போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் `வாத்தி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இப்படம் படமாகிவருகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு `சார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் திரையுலகத்திற்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததற்காக, `வாத்தி' படக்குழு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தனுஷில் 20 வருட சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் விரைவில் வாத்தி பட ஃபர்ஸ்ட் லுக் வர இருக்கிறது என அறிவித்திருந்தனர்.

banner

Related Stories

Related Stories