சினிமா

பாராட்டுகளைக் குவிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பட பாடல்.. இந்தியில் நடிக்க விருப்பமில்லை - மகேஷ் பாபு அதிரடி!

செவக்காட்டு சீமையெல்லாம் என்ற நெஞ்சுக்கு நீதி பாடல் தற்போது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாராட்டுகளைக் குவிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பட பாடல்.. இந்தியில் நடிக்க விருப்பமில்லை - மகேஷ் பாபு அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. பாராட்டுகளைக் குவிக்கும் `நெஞ்சுக்கு நீதி' பட பாடல்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் `நெஞ்சுக்கு நீதி'. இது இந்தியில் 2019ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்ப பெற்ற படம் ‘ஆர்டிகள் 15’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். இதில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிசந்திரன், ஷிவானி, மயில்சாமி எனப் பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சில சமீபத்தில் வெளியிடப்பட்டது. மே 20ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தற்போது படத்திலிருந்து `செவக்காட்டு சீமையெல்லாம்' பாடலை வெளியிட்டுள்ளனர். குரு ஐயாதுரை பாடியிருக்கும் இப்பாடலுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார், யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடல் தற்போது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

2. இந்தி சினிமாவில் நடிக்க விருப்பமில்லை - மகேஷ் பாபு

நடிகர் மகேஷ்பாபு தயாரிப்பில் சசி கிரண் இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் 'மேஜர்'. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம். நடிகர் அத்வி ஷேஷ் இந்தப் படத்தில் சந்தீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இந்தி புரமோஷனுக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மகேஷ் பாபுவிடம், உங்களுக்கு இந்தி சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா? எனக் கேட்டதும். "நான் சொல்வதை திமிரான பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இந்தியில் இருந்து நிறைய அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை. அதனால் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தென்னிந்திய சினிமாவிதுறையில் பணியாற்றவே எனக்கு விருப்பம். இங்கு படங்களில் சிறப்பாக நடித்தால் அது உலகம் முழுக்க சென்றடையும். என்னுடைய நம்பிக்கை நிஜமாவதை நான் இப்போது உணர்கிறேன்" எனக் கூறினார்.

3. வெளியானது `டியர் ஃப்ரெண்ட்' பட டீசர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். இவர் தற்போது வினீத் குமார் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் `டியர் ஃப்ரெண்ட்'. இதில் நாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களுக்கு கதை எழுதும், சர்ஃபூ - சுஹாஸ் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்கள். வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்துக்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

4. லண்டன் திரைவிழாவில் அனுராக் காஷ்யப்பின் `தோபாரா'

2020ல் வெளியான `சோக்ட்' படத்துக்குப் பிறகு, அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகிவரும் இந்திப்7 படம் `தோபாரா'. இதில் தாப்ஸி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே ராகுல் பட், சஸ்வத் சேட்டர்ஜி, பாவைல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்போது அதற்கு முன்பாக லண்டனில் நடைபெறும் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஜூன் 23ம் தேதி திரையாக உள்ளது.

5. ஜூன் 10ம் தேதி வெளியாகும் Janhit Mein Jaari!

ஜெய் பசுந்த் சிங் இயக்கத்தில் நஷ்ரத் பரூச்சா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திப் படம் `ஜன்ஹித் மெய்ன் ஜாரி'. காண்டம் பற்றிய சமூகத்தின் பொதுபுத்தியை கேள்வி கேட்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. காமெடியுடன் சேர்த்து மக்களுக்கு தேவையான கருத்தைப் பேசும் படம் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட உள்ளனர். ஜூன் 10ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

5. சித்தார்த் நடித்திருக்கும் `எஸ்கேப் லைவ்' வெப் சீரிஸ்!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `லைலா' சீரிஸுக்குப் பிறகு சித்தார்த் நடித்திருக்கும் வெப்சீரிஸ் `எஸ்கேப் லைவ்'. சித்தார்த் குமார் தேவ்ரி இயக்கியிருக்கும் இந்த சீரிஸில் ஸ்வேதா த்ரிபதி, ஸ்வசிகா முகெர்ஜி, ஜாவீத் ஜாஃப்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிகரித்து வரும் சமூக வலைதள அடிக்ஷன் பற்றிய வெப் சீரிஸாக உருவாகியுள்ளது இந்த `எஸ்கேப் லைவ்'. இந்த சீரிஸ் ஹாட்ஸாரில் வரும் மே 20ம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories