சினிமா

5in1_Cinema : ரிலீஸானது அருள் நிதியின் டைரி டீசர்.. மினியன்ஸின் அடுத்த பாகம் வெளியாவது எப்போது?

5in1_Cinema : ரிலீஸானது அருள் நிதியின் டைரி டீசர்.. மினியன்ஸின் அடுத்த பாகம் வெளியாவது எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`இரவின் நிழல்' வெளியீட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் தாணு!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இரவின் நிழல்'. உலகத்திலேயே முதன் முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படமாக உருவாகியிருக்கிறது இப்படம். இதனுடைய சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மாயவா என்ற பாடலும், படத்தின் டீசரும் அந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் பாடலை கேட்டு ஆர்வமான தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார். இதனை இயக்குநர் பார்த்திபன் மற்றும் தயாரிப்பாளர் தாணு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் 5ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் அருள்நிதியின் `டைரி'

தனித்துவமான கதைகளை தேர்வு செய்து கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அருள்நிதி. அவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் டைரி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் அறிவழகன், அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இதில் அருள்நிதியுடன் ஜெயபிரகாஷ், கிஷோர், ஷாரா, தனம் ஆகியோர் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருள்நிதி. தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.

மே 9ம் தேதி `மேஜர்' படத்தின் டிரெய்லர்!

நடிகர் மகேஷ்பாபு தயாரிப்பில் சசி கிரண் இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் 'மேஜர்'. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப் படம். நடிகர் அத்வே ஷேஷ் இந்தப் படத்தில் சந்தீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே ஷோபிதா, பிரகாஷ் ராஜ், ரேவதி, முரளி ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் 9ம் தேதி வெளியாகும் என்ற வீடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது.

கோவாவில் பாரோஸ் படப்பிடிப்பு, வைரலாகும் வீடியோ!

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் மோகன்லால், இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் `பாரோஸ்'. இது ஜிஜோ எழுதிய நாவலை மையமாக வைத்து அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார்.

3D-ல் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்று கோவாவின் Reis Magos Fortல் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு மோகன்லால் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்று பார்வையாளரால் எடுக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது.

ஜூலை 1ம் தேதி வெளியாகும் மினியன்ஸின் அடுத்த பாகம்!

ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் மிகப்பிரபலமான படம் `Despicable Me'. இதில் இதுவரை நான்கு நேரடி பாகங்களும், மினியன்ஸ் என்ற ஸ்பின் ஆஃப் பாகமும் வெளியாகியுள்ளது. தற்போது இந்த மினியன்ஸ் படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கும் படம் `Minions: The Rise of Gru'.

இந்தப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரம் க்ரூ. இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே படத்தின் இந்த பாகம் உருவாகியுள்ளது. குறிப்பாக க்ரூ கதாபாத்திரத்தின் குழந்தை பருவத்தை பற்றி சொல்ல இருக்கிறது படம். தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம் ஜூலை 1ம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories