சினிமா

ரஜினி 169ல் கன்னட நடிகர் சிரவாஜ் குமார்? சூர்யா - பாலா இடையே பிரச்சனையா? : பரபரக்கும் சினிமா துளிகள்!

ரஜினி 169ல் கன்னட நடிகர் சிரவாஜ் குமார்? சூர்யா - பாலா இடையே பிரச்சனையா? : பரபரக்கும் சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி 169ல் கன்னட நடிகர் சிரவாஜ் குமார்?

`கோலமாவு கோகிலா', `டாக்டர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் இயக்கிய `பீஸ்ட்' படம் சமீபத்தில் வெளியானது. இதற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் 169வது படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்தப் படத்தில் முக்கியமாக கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்ற தகவல்கள் உலவிவருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இயக்குநர் நெல்சன் பெங்களூர் சென்று சிவராஜ்குமாரை சந்திக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியாகும் விஜயின் `பீஸ்ட்'

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த படம் `பீஸ்ட்'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இந்தப் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக படம் வரவேற்கப்பட்டது. சண்டைக்காட்சிகள், பாடல்கள் என கலர்ஃபுல்லான படமாக இருந்தது பீஸ்ட்.

இணையத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரையரங்கை அடுத்து, படம் ஓடிடி தளத்திற்கு வர இருக்கிறது. மே 11ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் வெளியாகிறது பீஸ்ட்.

த்ரிஷா பிறந்தநாள், வெளியான ஸ்பெஷல் போஸ்டர் மற்றும் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், த்ரிஷா அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் `தி ரோட்' படத்தின் போஸ்டர் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சூர்யா வங்களா இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் வெப் சீரிஸ் `ப்ருந்தா' குழுவும் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

சூர்யா - பாலா இடையே பிரச்சனையா? - படக்குழு விளக்கம்!

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் பாலா இயக்கத்தில் நடித்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து `அவன் இவன்' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யா நடிக்கும் 41வது படம். இதில் க்ரித்தி ஷெட்டி, மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடந்து வந்தது. திடீரென இந்தப் படப்பிடிப்பில் சூர்யா - பாலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படப்பிடிப்பில் இருந்து சூர்யா வெளியேறியதாக தகவல்கள் வந்தது. ஆனால் இதனை மறுத்து, கன்னியாகுமரியில் 34 நாட்களாக நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு எந்த பிரச்சனையும் இன்றி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடக்க இருக்கிறது. இது ஜூன் மாதம், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் முடிந்ததும் துவங்க இருக்கிறது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

விஜய் 66ல் நடிக்கும் யோகிபாபு

`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். விஜயின் 66வது படமாக உருவாகும் இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் முதற்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் துவங்கியது. இதில் கலந்து கொள்ள நேற்று ஹைதராபாத் சென்றடைந்தார் விஜய். தற்போது இந்தப் படத்தில் யோகிபாபு நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவே பகிர்ந்திருக்கிறார். சர்கார், பிகில், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து விஜய் படத்தில் யோகி பாபு நான்காவது முறையாக நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories