சினிமா

மீண்டும் OTT-ல் மோகன்லால் படம்.. ரிலீஸானது 12th Man ட்ரெய்லர்; டோவினோவின் கலர்ஃபுல் தல்லுமாலா பட பாடல்!

நடிகர் மோகன்லாலின் `12th Man' பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மீண்டும் OTT-ல் மோகன்லால் படம்.. ரிலீஸானது 12th Man ட்ரெய்லர்; டோவினோவின் கலர்ஃபுல் தல்லுமாலா பட பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோகன்லாலின் `12th Man' பட டிரெய்லர் ரிலீஸ்!

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசஃப். இவர் மோகன்லால் நடிப்பில் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. கூடவே பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

தற்போது இவர் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடித்திருக்கும் படம் `12த் மேன்' (12th Man). இந்த திரைப்படம் விரைவில் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வெளியானது சந்தோஷ் சிவனின் `Jake N Jill' டிரெய்லர்!

இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப் படம் `ஜேக் அன்ட் ஜில்'.

இதில் காளிதாஸ், மஞ்சுவாரியர், சௌபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலிருந்து ஒரு பாடலும், டீசரும் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. மேலும் மே 20ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ரசூல் பூக்குட்டி இயக்கும் `Otta' பட போஸ்டர்!

இந்திய சினிமாவில் பல படங்களில் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ரசூல் பூக்குட்டி. இதற்காக பல விருதுகளை வென்றவர் ஸ்லெம்டாக் மில்லியனர்ஸ்' படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றார். 2019ல் வெளியானா `தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் ரசூல்.

தற்போது இயக்குநராக களம் இறங்கி உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு Otta' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆசிஃப் அலி, அர்ஜூன் அசோகன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தின் மூவிங் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சிவராஜ்குமாரின் `பைராகி' பட பாடல்!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் `பைராகி'. பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமாருடன் இணைந்து தனஞ்ஜெயா, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. அனூப் சீலின் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

டொவினோ தாமஸின் `தல்லுமாலா' பட பாடல்!

மலையாளத்தில் `அனுராக கரிக்கின் வெள்ளம்', `உண்டா', `லவ்' போன்ற படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். தற்போது இவர் டெவினோ தாமஸ், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் படத்தை இயக்கியிருக்கிறார்.

`தல்லுமாலா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதையை முஷின் பராரி மற்றும் அஷ்ரஃப் ஹம்ஸா எழுதியுள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து `கண்ணில்' என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர்

banner

Related Stories

Related Stories