சினிமா

பீஸ்ட் பட குழுவினருக்கு விருந்து வைத்து ஜமாய்த்த நடிகர் விஜய்.. வைரலாகும் ட்ரீட் போட்டோ!

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் பீஸ்ட் படக் குழுவினருக்கு விருந்து வைத்து சிறப்பித்துள்ளார்.

பீஸ்ட் பட குழுவினருக்கு விருந்து வைத்து ஜமாய்த்த நடிகர் விஜய்.. வைரலாகும் ட்ரீட் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய்யின் 65வது படமாக உருவான பீஸ்ட் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்திருந்த இந்த படத்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பீஸ்ட் படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் பீஸ்ட் படக் குழுவினருக்கு விருந்து வைத்து சிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தனக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்த நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு உருக்கமாக நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories