சினிமா

3 நாளில் 550 கோடி வசூல் ஹிட்.. மலைக்க வைக்கும் KGF சாதனை.. சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிய யாஷ்!

3 நாளில் 550 கோடி வசூல் ஹிட்.. மலைக்க வைக்கும் KGF சாதனை.. சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிய யாஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘கோப்ரா’ படத்தின் மாஸ் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆதிரா என்ற பாடல் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

மூன்றே நாட்களில் ரூ.550 கோடி வசூல் செய்த ’கே.ஜி.எஃப் 2’

கன்னட நடிகர் யஷ் நடிக்க பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’. முதல் பாகம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியினால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அதோடு, கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ.550 கோடி வசூல் செய்திருப்பதாக் கூறப்படுகிறது. அதுவும், முதல்நாளில் 134.50 கோடியும், இரண்டாவது நாளில் 275 கோடியும், மூன்றாவது நாளில் 145 கோடியும் வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெலுங்கு பாடகரான சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான சமீபத்திய மாநாடு படம் மாபெரும் வெற்றியை ஈட்டி தந்தது. இந்நிலையில், தெலுங்கில் உருவாகும் லிங்குசாமியின் புதிய படத்தில் ஒரு பாடலைப் நடிகர் சிம்பு படியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தி வாரியார். இப்படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சிம்பு. ராம்பொதினேனி மற்றும் கிருத்திஷெட்டி நடிப்பில் The Warrior படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில் வரும் ஜூலை 14 அன்று திரைக்கு வர இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு பதில் வாழ்த்து கூறிய நடிகர் யஷ்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கு ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் யாஷ். சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு, “உங்களது டாக்டர் படத்தை பார்த்து மிகவும் என்ஜாய் பண்ணேன். அது சிறந்த படம்” எனப் பாராட்டியும் ட்விட் தட்டியுள்ளார் யஷ்.

ரைசா வில்சன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகும் நாகா

இயக்குநர் ஆண்டனி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் பிந்து மாதவி, ரைசா வில்சன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு நாகா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்பொழுது துவங்கியுள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தில் நடிகை பிந்து மாதவி இடம்பெறும் காட்சிகள் இருக்கும், எனவும், புராணங்களை நிஜ உலகோடு பொருத்திப்பார்க்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க இருப்பதாகவும், ரைசா வில்சனின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்குமெனவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories