சினிமா

நயன்தாராவை அடுத்து ஜென்டில்மேன்-2ல் இணைந்த மற்றொரு நடிகை.. வெளியானது 'ஹரா' படத்தின் செம டீசர்!

நயன்தாராவை அடுத்து ஜென்டில்மேன்-2ல் இணைந்த மற்றொரு நடிகை.. வெளியானது 'ஹரா' படத்தின் செம டீசர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் செம டீசர்!

80களில் பல வெற்றி படங்களில் நடித்த மைக் மோகன் கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘ஹரா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'ஜெண்டில்மேன் 2' : நயன்தாராவை அடுத்து இணைந்த இன்னொரு நடிகை!

1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகி அதில் நாயகியாக மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிப்பதாகவும் எம்.எம்.கீரவாணி இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு நாயகியாக பிரியா லால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோ மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வை தயாரிப்பாளர் குஞ்சுமோன் நடத்திவருகிறார்.

நிறைவு பெற்றது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’...

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் உருவாகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளனர்.

எளிய முறையில் ரன்பீர் - ஆலியா திருமணம்..!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் நேற்று மும்பையில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

நயன்தாராவை அடுத்து ஜென்டில்மேன்-2ல் இணைந்த மற்றொரு நடிகை.. வெளியானது 'ஹரா' படத்தின் செம டீசர்!

இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இவர்களின் திருமணம் குறித்து ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைப்பெறாமல் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிய முறையில் நடந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளை வெளியாகும் ‘மாமனிதன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்..!

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிருக்கும் படம் ‘மாமனிதன்’. இளையராஜ மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைத்திருக்கும் இந்த படத்தின் வேலைகள் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் நாளை மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதையும் உறுதி செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories