சினிமா

ஷூட்டிங்கின் போது தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பந்தை பறக்கவிட்ட யோகி பாபு..!

ஷூட்டிங்கின் போது தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பந்தை பறக்கவிட்ட யோகி பாபு..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்துள்ள காமெடி நடிகர் யோகி பாபு உதகையில் உள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யோகிபாபு உட்பட பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தின் படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக காமெடி நடிகர் யோகிபாபு தற்போது உதகையில் தங்கியுள்ளார். காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சியை உதகை நகரில் மேற்கொண்டு வரும் அவர், கடந்த வாரம் மைதானத்தில் இளைஞர்கள் சிலருடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

தற்போது படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருவதால் இவர் உதகையிலேயே தங்கியுள்ளார். மாலை வேளையில் படப்பிடிப்பு நடக்கும் பகுதி அருகே அரசு பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார். அவர் விளையாடும் போது தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து இரண்டு முறை சிக்சர் அடித்து அசத்தியுள்ளா.

இது தொடர்பான வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபு பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள், தொழில்முறை கிரிக்கெட் வீரர் போலவே யோகி பாபு விளையாடுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக யோகி பாபுவுக்கு விளையாட்டின் மீது அதீத ஆர்வம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories