சினிமா

”நான் ஒரு பாலிவுட் ஆக்டர்.. மற்ற மொழில நடிக்க மாட்டேன்” - ஜான் ஆப்ரகாம் பேச்சால் சர்ச்சை!

பிரபாஸின் சலார் படத்தில் ஜான் ஆப்ரகாம் நடிக்கவில்லை என்பது உறுதியானாலும், அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

”நான் ஒரு பாலிவுட் ஆக்டர்.. மற்ற மொழில நடிக்க மாட்டேன்” - ஜான் ஆப்ரகாம் பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் பாலிவுட் உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் நடிப்பதும், பாலிவுட்டில் இருப்பவர்கள் தென்னிந்திய படங்களில் நடிப்பதும் அண்மைக்காலமாக நடந்து வருகிறது.

மேலும் தென்னிந்திய மொழி படங்கள் இந்தியிலும் வெளியிடப்பட்டு வரவேற்பும் பெற்று வருகிறது. அவ்வாறு KGF, பாகுபலி, புஷ்பா, RRR என பல படங்கள் மொழிகளை கடந்து வெற்றிகளை குவித்துள்ளது.

இப்படி இருக்கையில், மற்ற மொழி படங்களில் குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது தொடர்பாக பாலிவுட் நடிகரான ஜான் ஆப்ரகாம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் ஆப்ரகாம் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் அட்டாக் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது, பிரபாஸின் சலார் படத்தில் நடிக்கப்போவதாக வந்த தகவல் குறித்து ஜான் ஆப்ரகாமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதற்கு அவர், “மற்ற மொழிப்படங்கள் எதிலும் நான் நடிக்கவில்லை. இந்த வதந்தி எப்படி பரவியது என தெரியவில்லை. வேறு மொழிப்படங்களில் துணை நடிகர் கதாப்பாத்திரத்தில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு இந்தி நடிகர்” எனக் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் பிரபாஸின் சலார் படத்தில் ஜான் ஆப்ரகாம் நடிக்கவில்லை என்பது உறுதியானாலும், அவரது இந்த பேச்சு சினிமாத்துறையினரிடையே பெரும் முகம் சுழிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் பெரும் பொருட்செலவில் உருவான RRR, KGF 2 போன்ற படங்களில் அஜய் தேவ்கன், சஞ்சய் தத் போன்ற மூத்த நடிகர்களே தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஜான் ஆப்ரகாம் பேசியிருப்பது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories