சினிமா

”உங்களது அன்புக்கும், கனிவுக்கும் நன்றி” - அஜித்குமார் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் : எதற்கு தெரியுமா?

தனக்கு சிகிச்சை அளித்த கேரள ஆயுர்வேத மையத்திற்கு கைப்பட நன்றிக்கடிதம் எழுதியுள்ளார் நடிகர் அஜித் குமார்.

”உங்களது அன்புக்கும், கனிவுக்கும் நன்றி” - அஜித்குமார் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் : எதற்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வை, வலிமைக்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பிலேயே தனது 61வது படத்துக்காக கமிட்டாகியிருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

அதற்காக தனது தோற்றத்தை ஸ்டைலிஷாகவும் மாற்றியுள்ள அஜித்தின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்த போது அங்கு ரசிகர்கள் சிலர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தது.

”உங்களது அன்புக்கும், கனிவுக்கும் நன்றி” - அஜித்குமார் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் : எதற்கு தெரியுமா?

இப்படி இருக்கையில், பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையமான குருகிருபாவில் நடிகர் அஜித் சிகிச்சை பெற்றுக் கொண்டார். சிகிச்சை முடிந்த பிறகு குருகிருபா மையத்தின் சிகிச்சை முறைக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் தனது கைப்பட கடிதம் ஒன்றினை எழுதி அவர்களிடத்தில் வழங்கியிருக்கிறார்.

தற்போது அவரது கையெழுத்துக் கொண்ட அந்த கடிதம்தான் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹெச். வினோத் உடனான அஜித் 61 படத்தின் பணிகள் அனைத்தும் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி விரைவில் முடிக்கப்பட்டு நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலான படத்திலும் அஜித்குமார் நடிக்க இருக்கிறார். அதனை அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்ற அறிவிப்பும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories