சினிமா

பாகுபலியை மிஞ்சிய பட்ஜெட்.. ஷூட்டிங் ஸ்பாட்டை காட்டுக்கு மாற்றிய ராஜமெளலி.. வெளியானது அடுத்த பட அப்டேட்!

பாகுபலியை மிஞ்சிய பட்ஜெட்.. ஷூட்டிங் ஸ்பாட்டை காட்டுக்கு மாற்றிய ராஜமெளலி.. வெளியானது அடுத்த பட அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. மீண்டும் 500 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் படம்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. காடுகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெற இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

2. வெளிநாட்டில் தொடங்குகிறது ‘ரஜினி 169’ படப்பிடிப்பு!

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் 169வது படத்தை தயாரிக்கவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அல்லது ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகி பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3. கலையரசனின் டைட்டானிக்!

கலையரசன் நடிப்பில் உருவாகி 3 ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் திரைப்ப்டம் ‘டைட்டானிக்’. கலையரசன் ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கும் இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காயத்ரி, காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமாண்டிக் காமெடி கதைக்களமான இதன் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

4. ‘ஜீவி 2’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!

8 தோட்டாக்கள், ஜிவி, வனம் என அடுத்தடுத்து வித்யாசமான கதைக்களங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி அடுத்து ‘ஜிவி 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் தான் இந்த பாகத்தையும் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

5. மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால்!

2016ல் வெளியான ‘மருது’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் முத்தையா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 34வது படத்திற்காக முத்தையாவுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories