சினிமா

குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! #5in1_Cinema

அஜித் கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களில் ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் அஜித் கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! #5in1_Cinema

2. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஷூட்டிங் நிறைவு!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏப்ரல் 28ஆம் தேதி உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இறுதிநாள் ஷூட்டிங் முடிவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3. ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கும் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’!

தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்துவரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜெய்பீம் புகழ் தமிழ் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

4. மைக் மோகனின் ரீஎண்ட்ரி ‘ஹரா’!

80களில் பல வெற்றி படங்களில் நடித்த மைக் மோகன் கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஹரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜேம்ஸ்’. இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சோனி லிவ் தளம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories