சினிமா

ஷூட்டிங் முடியும் முன்பே பெரும் தொகைக்கு கார்த்தியின் ’சர்தார்’ படத்தை வாங்கிய பிரபல OTT!

பாதி ஷூட்டிங் முடிந்திருந்த வேளையில் விருமன் பட பணிகளில் பிஸியான கார்த்தி மீண்டும் சர்தாருக்கு திரும்பியிருள்ளார்.

ஷூட்டிங் முடியும் முன்பே பெரும் தொகைக்கு கார்த்தியின் ’சர்தார்’ படத்தை வாங்கிய பிரபல OTT!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டில் வித்தியாசமான, பாங்கான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி.

தனது சினிமா பயணத்தில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு இயக்குநர்களின் இயக்கத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இரும்புத்திரை மற்றும் ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இளம் போலிஸ், வயதானவர் என மாறுபட்ட கேரக்டரில் கார்த்தியின் சர்தார் உருவாகி வருகிறது. பாதி ஷூட்டிங் முடிந்திருந்த வேளையில் விருமன் பட பணிகளில் பிஸியான கார்த்தி மீண்டும் சர்தாருக்கு திரும்பியிருள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் சர்தார் படத்தில் ராஷி கண்ணா, சிம்ரன், ரஜிஷா விஜயன் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் பணிகளே இன்னும் நிறைவடையாத போது, சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சர்தார் படம் 20 கோடி ரூபாய்க்கு ஓடிடி-க்கு விற்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தியேட்டரில் எப்போது ரிலீஸாவது தொடர்பான அறிவிப்பே வெளியாகாத நிலையில் பெரும் தொகைக்கு ஓடிடியில் விற்கப்பட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் சர்தார் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இந்த ஓடிடி உரிமம் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories