சினிமா

”அப்போ பாட்டு; இப்போ படம்” - AK61க்கு முன்பே வெளியான AK62 அப்டேட்!

அஜித்தின் 62வது படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

”அப்போ பாட்டு; இப்போ படம்” - AK61க்கு முன்பே வெளியான AK62 அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை படத்துக்கு வலிமைக்காக இணைந்த அதே கூட்டணி தற்போது அஜித்தின் 61வது படத்துக்கும் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

அஜித் 61வது படத்துக்கான பூஜையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது. ஷுட்டிங் வேலைகளை விரைவில் முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

”அப்போ பாட்டு; இப்போ படம்” - AK61க்கு முன்பே வெளியான AK62 அப்டேட்!

இந்த நிலையில், அஜித்தின் 62வது படத்துக்கான தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, வலிமை படத்தில் வேற மாறி மற்றும் அம்மா பாடல்களை எழுதிய இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் அஜித் 62வை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த படத்தை அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயன் உடனான ஃபாண்டசி ரொமாண்டிக் கதையாக உருவாக இருந்த விக்னேஷ் சிவனின் Love Insurance Company (LIC) என்ற படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக அதன் வேலைகள் அறிவிப்புடனேயே நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories