சினிமா

அஜித்தின் ’வலிமை’ OTTல் எப்போது ரிலீஸாகிறது? வெளியானது தேதி குறித்த தகவல்!

வலிமை படம் ஓடிடி தளத்தில் வெளியாவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ’வலிமை’ OTTல் எப்போது ரிலீஸாகிறது? வெளியானது தேதி குறித்த தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று வெளியானது வலிமை திரைப்படம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்த படம் பொது சினிமா பார்வையாளர்களை அவ்வளவாக கவர தவறிவிட்டதாக கருத்துகள் வலம் வந்தது.

கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்த போதும் முதல் நாளிலேயே 34 கோடி ரூபாய்க்கு வலிமை படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே படத்தின் நீளம் தொடர்பான விமர்சனங்களும் தொடர்ந்த வந்த நிலையில் வெளியான மூன்றாவது நாளே 14 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வெளியான மூன்றாவது நாளிலேயே வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்திருந்தது. அதன்படி, Zee நெட்வொர்க் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியிருக்கும் வேளையில் எதிர்வரும் மார்ச் 25ம் தேதி zee5 தளத்தில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.

தற்போது வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழுவோ, தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories