சினிமா

வெளியான ஒரேநாளில் ‘வலிமை’ படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு.. இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் ?

அஜித் நடித்து நேற்று வெளியான வலிமை படத்தின் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

வெளியான ஒரேநாளில் ‘வலிமை’ படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு.. இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித்தின் 'வலிமை' படம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் கட் அவுட், பேனர் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிலையில் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்டுவதாக படத்தைப் பார்த்த பலரும் குறியுள்ளனர்.

அதேபோல் அதிகமான இடங்களில் செட்டிமன்ட் காட்சிகள் வேண்டும் என்றே திணிக்கப்பட்டது போன்று இருக்குறது.இது படத்தின் ஆர்வத்தையே கெடுக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான 'வலிமை' படம் பெரிய அளவில் சினிமாக ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. இதனால் படத்தின் காட்சிகளை குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் 'வலிமை'படத்திலிருந்து 14 நிமிட காட்சிகளைப் படக்குழு நீக்கி நாளை அதை வெளியிட உள்ளது. அந்த 14 நிமிட காட்சிகள் எது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories