சினிமா

”நீ வருவாய் என டூ வேற மாறி..” - ஈராண்டு காத்திருப்புக்கு வலிமை சேர்த்ததா வலிமை?

வழக்கமான தமிழ் சினிமாக்களில் வரும் வில்லன்கள் நாயகனின் குடும்பத்தினரை கொல்வதாக வரும் உருட்டல் மிரட்டல்களும் வலிமையிலும் தவறாமல் இடம்பெற்றுள்ளது.

”நீ வருவாய் என டூ வேற மாறி..” - ஈராண்டு காத்திருப்புக்கு வலிமை சேர்த்ததா வலிமை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘பார்த்து பார்த்து கண்கண் பூத்திருந்தேன் நீ வருவாய் என’ என்ற அஜித் படத்தின் பாடல் வரியை போன்றே அவரது ரசிகர்களும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காகவும், அதன் வெளியீட்டுக்காகவும் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள்.

அந்த காத்திருப்புக்கு விடை கொடுக்கும் வகையில் இன்று உலகெங்கும் வெளியாகியிருக்கிறது வலிமை திரைப்படம்.

பைக் ரேஸிங்கை வைத்து போதை மருந்து கடத்துவது, கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது வில்லன் கும்பல். அந்த கூட்டத்தை பிடிப்பதற்காக திறமை வாய்ந்த குழுவை அமைக்கிறது காவல் துறை.

மதுரையில் அம்மா, அண்ணன், தம்பிகளுடன் வசிக்கும் உதவி காவல் ஆணையராக வரும் அஜித் குமார் (அர்ஜூன்) பின்னர் சகோதரர்தகளின் நடவடிக்கையால் சென்னைக்கு வருகிறார். அங்கு, காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புக்குழுவில் சேர்கிறார் அஜித். அந்த குழுவில் கதையின் நாயகியாக இருக்கும் ஹூமா குரேஷியும் இடம்பெற்றிருக்கிறார்.

தன்னுடைய அதிரடியான நடவடிக்கைகள் மூலம் எப்படி அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை அஜித் பிடிக்கிறார் என்பதே திரைக்கதையாக இருக்கிறது.

முதல் பாதி முடிவில் அதிரடியாகவும் திருப்பத்துடனும் நகர்ந்த படத்தின் பிற்பாதி வழக்கமான சென்டிமென்ட்களோடு கலந்து எஞ்சிய திரைக்கதையும் நகர்கிறது. வழக்கமான தமிழ் சினிமாக்களில் வரும் வில்லன்கள் நாயகனின் குடும்பத்தினரை கொல்வதாக வரும் உருட்டல் மிரட்டல்களும் வலிமையிலும் தவறாமல் இடம்பெற்றுள்ளது.

எதுவாக இருந்தாலும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள், அஜித்தின் ரேஸிங் என பல சாகசங்களை உள்ளடக்கி அஜித் ரசிகர்களிடையே அப்லாஸ்களை பெற்றிருக்கிறது வலிமை. இருப்பினும் இரண்டாம் பாதியிலும் ஆக்‌ஷன் காட்சிகள் வந்தாலும் முழுமையான திருப்தியை கொடுக்காத வகையிலேயே இருந்ததாகவும் ஒருபுறம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் அஜித்தின் 61வது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத்தே இயக்குகிறார். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories