சினிமா

#Valimai | ”ஸ்பெஷல் ஷோ போட இவ்ளோ நேரமா” - கூரையை பிரித்து மேய்ந்த அஜித் ரசிகர்கள்; சேலத்தில் பரபரப்பு!

#Valimai | ”ஸ்பெஷல் ஷோ போட இவ்ளோ நேரமா” - கூரையை பிரித்து மேய்ந்த அஜித் ரசிகர்கள்; சேலத்தில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுமார் 900 நாட்களுக்கு பின் ஏகோபித்த வரவேற்புடனுடம் எதிர்ப்பார்ப்புடனும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது அஜித்தின் வலிமை திரைப்படம்.

இதற்காக விடிய விடிய தூங்காமல் காத்திருந்து சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதுபோக, டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டதுமே அனைத்தும் விற்றும் தீரும் அளவுக்கு தீயாய் செயல்பட்டு வந்தனர். தியேட்டர்களில் கட் அவுட் வைத்து கொண்டாடுவது என பல மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

#Valimai | ”ஸ்பெஷல் ஷோ போட இவ்ளோ நேரமா” - கூரையை பிரித்து மேய்ந்த அஜித் ரசிகர்கள்; சேலத்தில் பரபரப்பு!

இப்படி இருக்கையில், படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் சில இடங்களில் ரசிகர்கள் சிலர் அட்டகாசங்களில் ஈடுபட்டது காண்போரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

அதன்படி அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பாலுக்கு பதிலாக தயிரை ஊற்றுவது என பல்வேறு சம்பவங்கள் நடந்த்திருக்கின்றன.

அந்த வகையில் சேலத்தில் உள்ள ARRS மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் வலிமை படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கூரையை பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் திரையரங்க ஊழியர்கள் அதனை சரிசெய்தனர்.

banner

Related Stories

Related Stories