சினிமா

ராஜா ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் : இளையராஜா வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ராஜா ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் : இளையராஜா வெளியிட்ட புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் திரையிசையின் தனிப்பெரும் ஆளுமையாக இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளிலும் அவர் இசையமைத்துள்ளார்.

ஆயிரத்து நானூறுக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையால் பலரை கட்டிப்போட்டுள்ளார். இவைதவிர தனிப்பாடல்களாகவும் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

இசைஞானி இளையராஜாவின் தனி இசைப்பாடல்கள் பல ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றவை. அந்தவகையில் 'How to Name It?' இசை ஆல்பம் இளையராஜாவால் 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இளையராஜாவின் 'How to Name It?' கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரியது. அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் இளையராஜா.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இசைஞானி இளையராஜா, “திரைபடங்களில் தொடர்ச்சியாக பல பாகங்கள் வருவதைப் போல ஏன் இசையிலும் வரக்கூடாது? How to Name It? -02 விரைவில் வரப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner
live tv